மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்

மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல் நடைபெற்றது.
தி. பி.2056, ஆவணி 18/ 03.09.2025 முற்பகல் இந்நிகழ்வு அறிவியல் நூற்கள் கூர்ந்தாய்வர்களிடையே நிகழ்ந்தது.
இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறித்த நினைவுரையாற்றினார்.
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம், தமிழ்ப்போராளி இலக்குவனார் குறித்த புகழுரை ஆற்றினார். தே.மொ.ஊ. மூத்த வளமையர் முனைவர் வின்சுடன் நிறைவுரை யாற்றினார்.
இலக்குவனார் நினைவேந்தலை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தேசிய மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பின் வரும் நூல்கள் முதுநிலை வளமையர் முனைவர் வின்சுடனிடம் அளிக்கப்பெற்றன.
1. அன்றே சொன்ன அறிவியல் – சங்கக்காலம்
2. அறிவியல் சொற்கள் ஆயிரம்
3.அறிவியல் வகைமைச் சொற்கள் மூவாயிரம்
4-8. வெருளி அறிவியல் ஐந்து தொகுதிகள்
9. அறிவியல் கருவிகள் 1600
10. கட்டுரைமணிகள்
11. சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்
12. கணிணியியலில் தமிழ்பயன்பாடும் கலைச்சொற்களும்
இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திற்காகத் தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார், தொல்காப்பியமும் பாணினியமும் ஆகிய நூல்கள் முனைவர் சுரேசு குமாரிடமும்
அவிநாசிலிங்கம் மனையியல் – உயர்கல்விக் கழகத்திற்கான நூல்கள் பொருளியல் புல முதன்மையர் பேரா.முனைவர் மணிமேகலை இடமும்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கான நூல்கள் முனைவர் சவகரிடமும் வழங்கப் பெற்றன. மேலும் பேரா.முனைவர் மருதநாயகம், முனைவர் பாலகுமாரன், மூத்த வளமையர் சுரேசு ஆகியோரிடமும் நூல்கள் அளிக்கப் பெற்றன.
பேரா.முனைவர் சாருலதா, முனைவர் செயந்தி , முனைவர் மூவேந்தன், முனைவர் சரவணன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Leave a Reply