இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும் வரலாற்றுச் செய்திகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும் வரலாற்றுச் செய்திகள் பழந்தமிழர்களுக்கு வரலாற்றை எழுதி வைக்கும் உணர்வும் அறிவும் இல்லை என்று பரப்பி வருகின்றனர். சங்க இலக்கியப் பாடல்களிலேயே வரலாற்றுக் குறிப்புகள் பலவற்றைக் காணலாம். அகப்பாடல்களிலேயே உவமையாகவும் அடை மொழியாகவும் பல வரலாற்றுச் செய்திகளைப் புலவர்கள் தெரிவிக்கின்றனர். நடுகல், கல்வெட்டு, பட்டயம் முதலியனவும் வரலற்றுச் செய்திகள்தாமே! (தன்வரலாறு எழுதுவதைத் தற்புகழ்ச்சியாகக் கருதி எழுதவில்லை. அதுபோல் வாழ்க்கை வராற்றுச் செய்திகளையும் எழுதி வைக்க விரும்பவில்லை.) இவையெல்லாம் வரலாற்றுஅறிவு மிக்கவர்கள்தாம் பழந்தமிழர்கள் என்பதை மெய்ப்பிக்கின்றன. பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டனவும்…

இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் வெள்ளம்போல் தமிழர்களின் கூட்டம் அன்று   வீரத்தால் திரண்டெழுந்தபோது நம்மின் தெள்ளமுதத் தமிழ்ப்புலவர் என்ன செய்தார் திறனற்று வாய்மூடி இருந்தார்! ஆனால் கள்ளம்இல் குணம் கொண்டார் தமிழ்ப்ப கையைக் கனன்று எழுந்து தீய்க்கின்ற செந்தீ! அன்பை வள்ளல்போல் அளிக்கின்ற பெரிய ஆசான் வம்புக்குப் பணியாமல் குரல் கொடுத்தார்! சிறையினிலே அடைபட்டார்! இழந்தார் வேலை! செக்கிழுக்கும் மாட்டைப்போல் தமிழா சான்கள் குறைகொண்ட மதியாலே கண்டும் தம்மின் கும்பிஒன்று நிறைந்தாலே போதும் என்று முறையின்றிப் பேசாமல் இருந்தார்! மான மூச்சில்லை! இலக்குவனார்…

இலக்குவனார் பிறந்த நாளும் உலகத்தமிழ் நாளும்

இணைய உரையரங்கம் ஐப்பசி 13, 2053 * ஞாயிறு காலை 10.00 *13.11.2022 வரவேற்புரை:  கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் கவியுரைஞர்கள்: நற்றமிழ் வேந்தன் மறத்தமிழ் வேங்கை பைந்தமிழ்ப் புலவர் பழ.தமிழாளன் உரையாளர்கள்: பேரா.முனைவர் நா.இளங்கோ பேரா.முனைவர் முகிலை இராசபாண்டியன் இணைப்புரை : தோழர் தியாகு பதிவு இணைப்பு:  தோழர் மகிழன் நன்றியுரை: மாணவர் ஆரணி பாரதி தமிழ்க்காப்புக்கழகம் * இலக்குவனார் இலக்கிய இணையம் * தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி /…

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இன்றைய தமிழ்ப்புலவர்கள், நடுநிலைமை உணர்வுடனும் துணிவுடனும் அரசிற்கு அறிவுரை கூறுவோர் அருகியே உள்ளனர். கட்சிச் சார்பற்று ஆன்றோர்கள் அறிவுரை கூறினாலும் கட்சிக் கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்கும் போக்கே உள்ளது. யார் அறிவுரை கூறினாலும் அரசிற்கு எதிரான கருத்துகள் என்று புறந்தள்ளாமல் நல்லாட்சிக்கான வழிகாட்டி என்று ஏற்பார்கள் எனக் கருதுகிறோம். எனவே, தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர்…

இலக்குவனார் நினைவேந்தல், 04.09.2022

தமிழ்க்காப்புக் கழகம் கி.இ.க.[ஒய்.எம்.சி.ஏ.] பட்டிமன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 19, 2053 / 04.09.2022 ஞாயிறு காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்    வரவேற்புரை:       முனைவர் ப.தாமரைக்கண்ணன், செயலர், கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம் ந. காருண்யா, இளங்கலை-தமிழ் மூன்றாம் ஆண்டு, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர் திரு வ. ஏ. மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 2/2 பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின்  பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார். பழந்தமிழ்ச் சொல்…

தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (திருவள்ளுவர், திருக் குறள் 813) பயன்கருதிப் பழகுநருக்கும் பரத்தையருக்கும் கள்வருக்கும் ஒப்பாகத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவோரைக் கூறலாம். ஏனெனில் அவர்கள் தமிழ்ச்சொற்களை மக்கள் பயன்படுத்த இயலா வண்ணம் கவர்ந்து அகற்றி விடுகிறார்கள். பொதுநலம் பார்க்காமல் பிறருக்குப் பொதுவாக இருந்து புன்னலம் தோயும் விலைமக்களுக்கு ஒப்பாகத் தமிழ் நலம் பார்க்காமல் வாழ்கிறார்கள். குமரி முதல் இமயமலை வரை வழங்கி வந்த தமிழ் மொழி,…

புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன், திருவள்ளுவர் கூறும் படைமாட்சி இலக்கணத்திற்கேற்ப செம்மாந்த படை அமைத்தவர். உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761) என்கிறார் திருவள்ளுவர். இதற்கு விளக்கம் தரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், “அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும்….

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்   [ஙோ] 3. தமிழ்நலப் போராளி  இந்நூலைத் தொடர்ந்து தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், மொழியியல் குறித்த தமிழ், ஆங்கில ஆராய்ச்சி நூல்களைப் பேராசிரியர் சி.இலக்குவனார் எழுதி உள்ளார். ஒவ்வொரு நூலிலும் பேராசிரியரைப் புரட்சிப் போராளியாக அடையாளப்படுத்தும்  கருத்துகளைக் காணலாம்.  “அழுக்கு படிந்த ஒன்றினைத் துடைத்துத் தூய்மையாக்கினால் புதிய ஒன்றாகப் பொலிவுடன் காட்சி அளிக்கும். இதுதான் அதன் உண்மைத் தோற்றம் எனினும் அழுக்கையே பார்த்துப் பழகியவர்களுக்கு இது…

புதிய அரசிற்கு வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய அரசிற்கு வாழ்த்துகள்!   மாண்புமிகு பன்னீர்செல்வத்தை முதல்வராகக்கொண்டு கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06,  2016 அன்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளதற்கு ‘அகரமுதல’ இதழ் வாழ்த்துகிறது.   இதற்கு முன்னர் இரு முறை [புரட்டாசி 05, 2032 – மாசி 17, 2033 (செட்டம்பர் 21, 2001 / மார்ச்சு 1, 2002);  புரட்டாசி 11, 2045 – வைகாசி 08, 2046 (செட்டம்பர் 2 , 2014 –   மே 22, 2015)]  முதல்வராகப் பதவிப்பொறுப்பேற்றார்.  எனினும் நடைமுறையில் இரண்டாமவராகத்தான்…