(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 133 – 174 இன் தொடர்ச்சி)

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 175 – 186

175. உடல் அசைவியல்

176. இன்ப துன்பவியல் álgos, hēdonḗ ஆகிய பழங் கிரேக்கச் சொற்களின் பொருள்கள் துன்பம், மகிழ்ச்சி என்பனவாகும். இன்பத்தில் வருவதுதானே மகிழ்ச்சி.  
Kinology

Algedonics
177. ஈக்களியல்   Diptero என்றால் ஈரிறக்கை எனப் பொருள். இரண்டு இறக்கைகள் உள்ள ஈயைக் குறிக்கிறது.Dipterology
178. ஈரப்பத அசைவியல்   hugrós என்னும் பழங் கிரேக்கச் சொல் ஈரப் பதத்தைக் குறிக்கிறது. Hugrós >HygroHygrokinematics
179. ஈரப்பதஇயல்  Hygrology(2)
180. ஈரலியல்   ēpat- என்னும் பழங்கிரேக்கச் சொல் ஈரலைக் குறிக்கிறது.  Ēpat >Hepat கல்லீரலியல் என்பதைவிட இலங்கை வழக்கான இச்சொல் சுருக்கமாக உள்ளது.Hepatology
181. ஈரல்பாசியியல்   hepatic என்றால் ஈரல் உருப்பாசி எனப் பொருள். எனவே, ஈரல் உருப்பாசியியல் என்றும் கூறலாம்.  நாம் சுருக்கமாக ஈரல்பாசி என்போம். hepaticus என்னும் பழைய இலத்தீன் சொல்லின் பொருளும் hēpatikós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருளும் கல்லீரல்(+இன்). இங்கே ஈரல் பாசியைக் குறிக்கிறது.Hepaticology
182. ஈரானியல்Iranology
183. ஈர்ப்பியல்   báros என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் எடை. எடைக்கும் புவி ஈர்ப்பிற்கும் உள்ள தொடர்பைக் குறித்த இயற்பியலின் கிளை. ஈர்ப்பியல் எனப்படுகிறது.Barology
184. ஈவுப்பரப்புரு   Quotient Topology என்பதற்கு  ஈவுப்பரப்புரு என்றும் ஈவுத்திணையம் என்றும் இருவகையாகக் குறிக்கின்றனர். கணிதத்துறை என்பதால் ஈவுப்பரப்புரு எனக் குறித்துள்ளோம்.            Quotient Topology
185. ஈளையியல் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து செருமானியத்தில் இடம் பெற்ற சொல் Asthma. இதன் பொருள்கள் காசநோய், மூச்சுத்தடையுடன் கூடிய இருமல், ஆசுதுமா, மூச்சுவிடுவதில் தடை ஏற்படும் நுரையீரல் நோய், ஈளை நோய், ஈளை, காசம், உப்பசம், சுவாசகாசநோய், சுவாசநோய், தமகசுவாசம், மந்தாரகாசம், மந்தாரசுவாசம், மூச்சிழுப்பு,  மூச்சுமுட்டல், இரைப்பு, ஈழை நோய் என்பனவாகும். இவற்றுள் பிற மொழிச்சொற்களும் ஒலிபெயர்ப்புச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. சுருக்கமான ஈளையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  Asthmology
186. உடம்பியியல்      Physiology என்பதை இயங்கியல், உடலியக்கவியல், உடலியங்கியல், உடற் றொழிலியல், உடற் கூற்றியல், உடலியல்,  உடம்பியல், உடற்பண்பியல், உடலுயிரியல் நூல், உடலணு ஆய்வியல், உடற் செயல்பாட்டியல், உடல், உடல்நூல்,  சரீரசாத்திரம், உடற்செயலியல், உடலியல் வினையியல்,  உயிர்ப் பொருளியல்,  செயலியல், வாழ்வியல், வினையியல் எனப் பலவகையாகக் கூறுகின்றனர். இஃது, உடலிலுள்ள உறுப்புகள் அவை செய்யும் வேலைகள், அவற்றின் பண்புகள் ஆகிய வற்றை ஆராயும் துறை. Somatos என்னும் கிரேக்கச் சொல்லி லிருந்து உருவான Soma என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் உடம்பு. உடம்பியல், உடற்பண்பியல், உடலுயிரியல் நூல், உடலணு ஆய்வியல்  என்கின்றனர். பேரா. அ.கி.மூர்த்தி உடலில் இருந்து வேறு படுத்த உடம்பி என்கிறார். அதைப் பயன்படுத்தி, மனித உடம்பி குறித்த கல்வி ஆதலின் உடம்பியியல் என்று குறித்துள்ளோம்.   உடம்பியியல் என்பது உடலின் இயல்பான செயல் பாட்டியலைக் குறிக்கிறது. Kinology – உடல் அசைவியல் என்பது உடலில் உள்ள எலும்பு, தசை அமைப்பு சார்ந்தது. உயிரினங்களின் வகுப்பு களின்படி, உடலியல் துறையானது மருத்துவ உடம்பியியல் (medical physiology), விலங்கு உடம்பியியல் (animal physiology), தாவர உடம்பியியல் (plant physiology), உயிர்மி உடம்பியியல் (cell physiology), ஒப்பீட்டு உடம்பியியல் (comparative physiology) என ஐவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இயற்பியலில் Physiology  – அசைவுவிதி எனப்படுகிறது.       Physiology / Somatology /  Body Mechanics    

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000