(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1551- 1556 இன் தொடர்ச்சி)

1557. முதுஉப்பல் அண்டவியல்Old Inflationary Cosmology
1558. முதுமை மருத்துவம் gêras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதுமை.Geriatric Medicine
1559. மூப்பியல் Geronto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதியவர்/மூப்பு.Gerontology / Gerology
  1560. முத்தயியல் phílēma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் முத்தம்.  Philematology
1561. முப்பருமானவியல் solid என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள்கள் திடப்பொருள், முப்பருமானம்.Stereology
1562. மும்மை ஒப்புமையியல் வெப்பம், உந்து, நிறை மாற்றம் இவற்றிடையே உள்ள (heat, momentum, and mass transfer) ஒப்புமை குறித்தது. எனவே, மும்மை ஒப்பியல் எனலாம்.Colburn Analogy
1563. முரணியல் heresio- என்பதன் பொருள் திரிபு. நிறுவப்பட்ட நம்பிக்கை களுக்கு அல்லது முறைமை களுக்கு முரண்பட்டவற்றைக் கூறும் கோட்பாடு என்பதால் முரணியல் எனக் குறித் துள்ளேன்.Heresiology 1
1564. மதவெறியியல் hæresy என்னும் பிரெஞ்சு முதலான சொல்லின் பொருள் கோட்பாட்டு முறைமை. மதக் கோட்பாட்டைக் குறிக்கிறது. மத வெறி குறித்த ஆராய்ச்சியைப் பற்றிய துறை. மத வெறியை ஆராயும் பொழுது மதத்திற்கு எதிரான கருத்துகள்பற்றிய ஆய்வும் இடம் பெறும்.Heresiology 2
1565. முருகியல் முருகு என்றால் அழகு என்றுதான் பொருள். அழகானவனை முருகன் என்பதும் அதனால்தான். அழகு குறித்த இயல் முருகியல் எனப்படுகிறது.Aesthetics
1566. முழுமனஉளவியல் Gestalt என்னும் செருமானியச் சொல்லிற்கு வடிவம் எனப் பொருள். Gestalt என்பதற்கு முழுமை என்றும் பொருள். முழுமன உளவியல் என்பதில் இருமுறை மனம்(உள்ளம்) வருவதால் முழுநிலை உளவியல் என மாற்றியுள்ளேன். பொதுமை உளவியல் என்றும் குறிப்பிடுகின்றனர்.   Gestalt psychology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000