(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 238 – 257 இன் தொடர்ச்சி)

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290

258. உயிரியத் தகவலியல் 

Ioinformatics

259. உயிரித் தொடர்பியல்

Biocenology

260. உயிரியத் தொல்லியல்           

Bioarcheology

261. உயிரியப் பாய்வியல்           

Biorheology

262. உயிரியப் புவியியல்

Chorology நிலத்திணையியல், உயிர்(ப்) புவியியல், இடவிவரண இயல், இடவிவரயியல்,  நிலப்பரப்பு வளநூல், எனப் படுகிறது.

இடம் என்னும் பொருளுடைய koros என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே Choro என்னும் சொல்.

Biogeography  உயிரியப் புவியியல், உயிர்ப் புவிப் பரப்பியல், உயிரி நிலவியல்,  புவி உயிர்ப் பரவியல்  எனப்படுகிறது. எனவே, இரண்டும் ஒன்றேதான்.

இவற்றுள் உயிரியப் புவியியல்  Chorology / Biogeography எனலாம்.

Chorology / Biogeography

 

263. உயிரியப் பொருளியல்

Biological economics

264. உயிரியப் பொறியியல்

Bioengineering 

265. உயிரியல் 

Biology /  Biologics

266. உயிரியப் புள்ளியியல்

Biostatistics

267. உயிரிலியியல்           

Azoology

268. உயிரினத் தொடர்பியல்

Hexicology / Hexiology

269. உயிரினப் பின்னடைவியல்

Clinology

270. உயிர்மிக் கருவியல்

Karyology/Caryology  மரபணு ஆய்வியல், உயிரணுக் கருவியல், உட்கருவியல் எனப்படுகிறது. உயிரணுவை உயிர்மி எனக் குறிப்பதால்

உயிர்மிக் கருவியல் – Karyology/ Caryology என இங்கே தரப்பட்டுள்ளது.

Karyology / Caryology

271. உயிர்மி உயிரியல்

Cell Biology

272. உயிர்மி நோயியல்

Cell pathology

273. உயிர்மி உடம்பியியல்

Cytophysiology

274. உயிர்மி நுட்பியல்

Cytotechnology

275. உயிர்மி நோயியல்

Cytopathology

276. உயிர்மி மரபியல்

Cyto Genetics உயிரணு மரபியல் என்று கூறப்படுகிறது.

உயிரணுவை நாம் உயிர்மி என்பதால்

Cyto genetics  – உயிர்மி மரபியல் எனலாம்.        

Cyto genetics /  Cell Genetics

277. உயிர்மி யியல்

Cytology 

278. உயிர்மி வடிவியல்

Cytomorphology

279. உயிர்மி வளைசலியல்

Cellular Ecology

280. உயிர்வளி

Oxygen

281. உய்த்துணர் புள்ளியியல்

Inferential statistics

282. உராய்வியல்

Anatripsology / Tribology

283. உருபனியல்    

காண்க : உருபனியல்(1)

Morphology(2)

284. உருவகவியல்

Tropology

285. உருவடிப் பொறியியல்  

Shape Engineering  

286. உருவரையியல்

Curiology

287. உருள் புழுவியல்

Nematology

288. உரூனிக்கு எழுத்தியல்

Runology

289. உரை விளக்கியல்

Dittology

290. உரோமனியியல்

உரோமனி மக்கள் (Romani/ Romany /ˈroʊməni/Roma people) குறித்த இயல்.

உரோம் நாட்டு மக்களல்லர். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாகப் பஞ்சாபு பகுதியில்  இருந்து கி.பி.11 ஆம் நூற்றாண்டில் வடமேற்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்து உலகில் பல நாடுகளில் பரவியுள்ளார்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இசுலாம் பரவிய காலத்தில் ஏதிலிகளாக வடக்கு ஆப்பிரிக்கா,  ஐரோப்பாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்றும் சொல்லலாம். உலகில் நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று உள்ளனர்.

கிரேக்கத்தில் tsingános என்றால் நாடோடி (Gypsy) எனப் பொருள். தமிழ் நாட்டில் நரிக்குறவர் என்று அழைக்கப்படுபவர். இருப்பினும் நாடோடி இயல் என்று சொல்லாமல் இனக்குழு பெயரில்

உரோமனியியல் – Tsiganology எனலாம்.

Tsiganology

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்
வகைமைச் சொற்கள் 3000