(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 258 – 290   இன் தொடர்ச்சி)

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313  

291. உலகளாவியத் தொற்றியல்

Global epidemiology

292. உலாவியல்

Promenadolog / Strollology

293. உழைப்பு நுகர் நுட்பியல்

Labour using technology

294. உழைப்புச் செறிவு நுட்பியல்

Labour intensive technology

295. உழைப்புப் பொருளியல்

Labour economics

296. உள இனவியல்

Psychoethnology

297. உள நரம்பு ஏமவியல்

Psychoneuroimmunology

298. உள நோயியல்

Psychopathology

299. உள மருத்துவயியல்

Psycho therapeutics

300. உள மருந்தியல்         

Psychopharmacology

301. உள மொழியியல்

Pscho linguistics

302. உள வரைவியல்

Psychographics

303. உளக் கூற்றியல்

Psycholathology

304. உள வளைசலியல்

Ecopsychology

305. உளப் புள்ளியியல்

Psychological Statistics  உளப்புள்ளியியல், உளவியல் புள்ளியியல், உள்ளத்தியல் புள்ளியியல், உளவியப் புள்ளியியல், மனப் புள்ளியியல், மனோதத்துவப் புள்ளியியல் எனப்படுகின்றது. இவற்றுள் சுருக்கமான சொல்லான உளப் புள்ளியியல் – Psychological Statistics என்பதை நாம் பயன்படுத்தலாம்.

Psychological Statistics

306. உளவியல் 

Psychology

307. உள்நாட்டு ஒப்புமையியல்

Domestic Analogy

308. உள்ளுணர்வியல்

Conscientology

309. உள்ளுறுப்பு இயல்

Splanchnology

310. உறக்கவியல்

Somnology

311. உறழ்ச்சி மொழியியல்

Contrastive linguistics

312. உறுப்புச் சீரியல்

Anaplastology

313. உறுப்புப் பொருத்தியல்

prosthetikós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் சேர்த்தல், கூடுதல் ஆற்றல் தருதல் என்பனவாகும். உடலுறுப்புகளுக்கு மாற்றாகச் செயற்கை உறுப்புகளைச் சேர்த்து ஆற்றலைத் தருவதால், செயற்கை உறுப்புகளைப் பொருத்தல் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. சுருக்கமாக நாம் உறுப்புப் பொருத்தல் எனக் குறிப்பிட்டு இது குறித்த ஆராய்ச்சித் துறையை உறுப்புப்பொருத்தியல் எனலாம்.

Prosthetics

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000