ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 371 – 377 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 363-370 இன் தொடர்ச்சி)
371. ஏரணச் சொற் பொருளியல் Logical Semantics – தருக்க சொற்பொருள், ஏரணத் தொடரியல், ஏரணப் பொருண்மை யியல், தருக்க பொருண்மை யியல், முறைமைத் தொடரியல் எனப் படுகின்றது. Semantics குறி விளக்கவியல், சொற் பொருளியல், சொற் பொருள் அறிவியல் சொற் பொருள் ஆய்வியல், பொருண்மை யியல், மொழியி(ய)ல் பொருள் என்பதுபற்றி விளக்கும் துறை, பொருளுணரியல், பொருள் தொடர்பியல் எனப்படுகின்றது. sémantique என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் சொற்பொருள் தொடர்பு என்பதாகும். சொல்லின் பொருள்பற்றிய இயல் என்பதால், ஏரணச் சொற்பொருளியல் Logical semantics எனலாம். (சொல்லியல் என்றால் lexicology ஐக் குறிக்கும்.) |
Logical Semantics |
372. ஏவா வரைவியல் |
Passive Graphics |
373. ஏவியல் |
Ballistics |
374. ஐன்சுதீன் போசர் புள்ளி யியல் ஐன்சுதீன் போசர் புள்ளியியல் என்பது போசர் ஐன்சுதீன் புள்ளியியல் (போ.ஐ.புள்ளியியல்) என்றும் அழைக்கப் பெறுகிறது. ஒரு சொல் மெய்யெழுத்தில் முடியாது என்பதாலும் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதாலும் Bose என்பது போசு எனப்படுகிறது. தமிழ் மரபிற்கேற்ப அர் விகுதி சேர்த்துப் போசர் எனக் குறித்துள்ளேன். |
Einstein Bose Statistics |
375. ஒட்டுச் சிப்பியியல் |
Cirripedology |
376. ஒட்டுண்ணி யியல் |
Parasitology |
377. ஒட்பவியல் பொதுஅறிவு இயல் எனச் சொல்கின்றனர். General Knowledge எனத் தவறாகப் பொருள் கொள்வர். Gnoseology – அறிவீட்டவியல், மெய்ப் பொருளியல், ஞானவியல் என மூவகையாகக் கூறப்படு கின்றது. Epistemology என்றாலும் அறிதலியல், அறிவீட்டவியல், அறிவீட்டியல் எனப்படுகின்றது. Episteme என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் அறிவு. Gnosis என்னும் சொல்லின் பொருள் மெய்ப்பொருளறிவு, அறிவியலறிவு ஆகியன. எனவே, தனித்தனி கலைச்சொல்லையே இரண்டிற்கும் பயன்படுத்துவது தான் குழப்பத்தை நீக்கும். உணர்வு, காட்சி, உரன், மேதை, தெளிவு, புலன், தெருட்சி, போதம், புத்தி, ஞானம் ஆகியவை அறிவின் வேறுபெயர்கள் எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது. ஒட்பம் என்றாலும் அறிவுதான். பட்டறிவு மூலம் வருவது இது. நாம் இந்த இடங்களில் புலன் என்பதையும் ஒட்பம் என்பதையும் பயன்படுத்தலாம். ( திருக்குறள் சொல் ஒட்பம்.) ஆதலின் புலனியல் – Gnoseology; ஒட்ப இயல் > ஒட்பவியல் – Epistemology என வகைப்படுத்தலாம். panto என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் அனைத்து. இங்கே அனைத்துப்பிரிவு அறிவையும் குறிக்கிறது. sophia என்னும் இடைக்காலக் கிரேக்கச் சொல்லின் பொருள் ஒட்பம்(அறிவு) எனவே, Pantology / Sophology ஆகிய இரண்டும் ஒட்ப வியலையே குறிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் செம்பொருள் ஒட்பவியல் – Virtue Epistemology படிமலர்ச்சி ஒட்பவியல் – Evolutionary epistemology பெண்ணிய ஒட்பவியல் – Feminine epistemology மரபுவழி ஒட்பவியல் – Genetic Epistemology எனலாம். |
Epistemology / Pantology / Sophology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply