(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  371-377 இன் தொடர்ச்சி)

378. ஒண் செடியியல்

Orchidology

379. ஒத்திசைவியல்

Cohomology / Harmonology / Synchronology

380. ஒப்பனை யியல்

381. Cosmetology  – எழிலியல், அழகியல், அழகு சாதனவியல், அழகுக் கலையியல் எனக் குறிப்பிடுகின்றனர்.

 Cosmeto என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடையும் அணியும் எனப் பொருள்.

Cosmetics என்றால் ஒப்பனை யியல் எனப் பொருள்.

ஒப்பனையியல் என்பது மேற்குறித்தவற்றை உள் ளடக்கியதாகும்.

எனவே, ஒப்பனையியல் –  Cosmetology  / Cosmetics எனலாம்.

Cosmetology  / Cosmetics

382. ஒப்புமை யியல்

Analogy

383. ஒப்பியத் தொற்றியல்

Comparative Epidemiology

384. ஒப்பிய உளவியல்       

Comparative Psychology

385. ஒப்பிய மொழியியல்

Comparative linguistics

386. ஒப்பியச் சூலியல்        

Comparative Embryology

387. ஒப்புமைக்காலவியல்

Relative Chronology என்பது, சார்  காலக்கணிப்பியல், படுகைச் சார்புக் கால யியல், உறவினர் காலவரிசை என மூவகையாகக் குறிக்கப் பெறுகிறது. இவற்றுள் உறவினர் என்பது தவறான புரிதலில் இடம் பெற்ற சொல்லாட்சி. காலவரிசைமுறை குறித்த chronology என்பதற்குக் காலயியல் என்கிறோம். Relative என்பது தொடர்புபடுத்தி ஒப்பிட்டு ஆய்வதைக் குறிக்கிறது. எனவே , ஒப்பீட்டுக் காலவியல் என முதலில் குறிப்பிட்டேன். ஒப்பீடு என்பது Comparative எனப் பொருள் கொள்ள நேரிடலாம். எனவே, ஒப்புமை என்பது ஏற்றதாக இருக்கும் என்பதால் ஒப்புமைக் காலவியல் எனக் குறித்துள்ளேன்.

Relative Chronology

388. ஒப்புமைப் பரப்புருவியல்

Relative Topology என்பதைச் சார்புப் பரப்புருவியல், சார் திணையம், உறவினர் இடவியல் எனக் குறிக்கின்றனர். தவறான புரிதலில் உருவானது உறவினர் இடவியல். Relative Topology என்பதற்கு ஒப்பீட்டுத் திணையியல் என முதலில் குறித்திருந்தேன். இது கணிதத்துறை என்பதால் பரப்புருவியல்தானே சரியாக இருக்கும். மேலும் ஒப்பீடு என்பது Comparative எனப் பொருள் கொள்ள நேரிடலாம். எனவே,  ஒப்புமைப் பரப்புரு வியல் என்பதே ஏற்றது என மாற்றியுள்ளேன்.

Relative Topology

389. ஒப்பீட்டுத் தொன்மவியல்

Comparative mythology

390. ஒப்புக் கிளைமொழியியல்      

Comparative Dialectology

391. ஒப்புமை நீர்மயியல்

Hydraulic analogy

392. ஒருகாலக் கிளை மொழியியல்

Synchronic Dialectology

393. ஒருங்கு  வளைசலியல்

Synecology

394. ஒருங்கொளியியல்

Integrated Optics –   ஒருங்கிணை ஒளியியல், ஒருங்கிணைந்த ஒளியியல், தொகு ஒளியியல், தொகுப்பு ஒளியியல் எனக் கூறுப்படுகின்றது. நாம் சுருக்கமாக

ஒருங்கொளியியல் – Integrated optics  எனலாம்.

Integrated optics

395. ஒருமை யியல்

ஒன்று என்னும் பொருள் கொண்ட heîs என்னும் பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது.

Henology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000