(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  378 – 395 இன் தொடர்ச்சி)

396. ஒலி உச்சஇயல்

Accentology

397. ஒலி ஒளியியல்

Acousticcooptics

398. ஒலிப் பொறியியல்

Sound Engineering

399. ஒலிய வியல்

 

பேச்சொலிகள்பற்றிய அறிவியல் என்பதால் ஒலிய வியல் எனலாம். மொழியின் சிறுகூறாகிய எழுத்தொலிகள் பற்றி ஒலியனியலும் பெருங் கூறாகிய பேச்சொலிகள் குறித்து ஒலியவியலும் ஆராய் கின்றன.

Phonemics

400. ஒலியனியல்

ஒலியியல், ஒலியனியல், ஒலி வரலாற்று ஆய்வு, எனச் சொல்லப் படுகின்றது. பொதுவான ஒலிகளைப்பற்றி ஒலியியல் –  acoustics என்றும் சொற்களின்/சொற்களில் இடம்பெறும் எழுத்துகளின் ஒலிபற்றிய இயலை ஒலியனியல் என்றும் சொல்வதே சரியாக இருக்கும்.

Phonology

401. ஒலியிய ஒலிப்பியல்

Acoustic Phonetics – ஒலியியக்கவியல், ஒலியியக்க ஒலியியல், கேட்பொலிசார் ஒலியியல் எனப்படுகிறது.

Phonetics – ஒலிப்பியல் எனக் குறித்துள்ளோம்.

எனவே, ஒலியிய ஒலிப்பியல் – Acoustic phonetics எனலாம்.

Acoustic Phonetics

402.ஒலியிய மின்னணுவியல் 

Acoustoelectronics

403.ஒலியியல்

Acoustics – ஓசையியல், ஒலி இயல், ஒலி நுட்பவியல், ஒலியியக்க வியல், ஒலி யியல், கேட்பொலி யியல், ஓசை ஆய்வியல், ஒலி சார்பியல். ஓசைக்குரிய, ஓசைய, கேளொலி சார், செவிப்புலன் தொடர்பான(சம்பந்தமான)  எனப் பலவகையாகக் கூறப்படுகிறது. 

எல்லாப் பொருள்களுமே சரிதான். என்றாலும் ஒற்றைச் சொல் பயன்பாட்டில் இருப்பதே நன்று. எனவே, ஒலியியல் – Acoustics எனப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் பின்வரும் சொற்களைக் காணலாம்.

இசை ஒலி யியல்           – Musical Acoustics

உயிரிய ஒலி யியல் – Bioacoustics

கட்டட ஒலி யியல் –  Architectural Acoustics –

கதிரொலி யியல்       – Ray acoustics

காந்த ஒலி யியல் – Magneto acoustics

 நீர்ம ஒலி யியல் –     Hydroacoustics

நுண்ணலை ஒலி யியல் –  Microwave Acoustics

நேரியல்சாரா ஒலி யியல் – Nonlinear acoustics

பகவு ஒலி யியல்       – Quantum acoustics

புவி  ஒலி யியல்         – Geoacoustics

மிகு ஒலி யியல்  –      Hyperacoustics

வளிமண்டல ஒலி யியல்  – Atmospheric Acoustics

வானொலி ஒலி யியல்        –  Radio Acoustics

கிரேக்கத்தில் இருந்து உருவான acoustique என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கேள்.

“ஒசை ஒலி யெலாம் ஆனாய் நீயே” என்கிறார் திருநாவுக்கரசர். எனவே, ஓசை வேறு, ஒலி வேறு என உணரலாம். பொதுவாக பொருளற்றதை ஓசை எனவும் பொருள் உணரக்கூடியதை ஒலி என்பதுமே தமிழர் வழக்கு. இப்பொழுது அறிவியலில் ஓசையையும் ஒலி என்கின்றனர்.

 Acoustics

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000