ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 431 – 451 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 421 – 430 இன் தொடர்ச்சி)
431. கடலியல் |
Oceanology |
432. கடல் உயிரியல் |
Marine biology |
433. கடல் பொறியியல் |
Marine Engineering |
434. கடல் வானிலையியல் |
Naval Meteorology |
435. கடல்சார் தொல்லியல் |
Marine Archaeology |
436. கடல்முள்ளி யியல் |
Acanthology |
437. கடற்கரைப் பொறியியல் |
Coastal Engineering |
438. கடற் பாசியியல் |
Algology (2) |
439. கடற்பரப்பு வானிலையியல் |
Marine Meteorology |
440. கடைக்கால் பொறியியல் |
Foundation Engineering |
441. கடைத்தேற்ற இயல் Soteriology என்றால் கடைத்தேற்ற இயல் என்றும் விடுபாட்டு நெறியியல் என்றும் குறிப்பிடுகின்றனர். Soteria என்றால் பழங் கிரேக்கத்தில் கடைத் தேற்றம்/உய்தி/விடுபடு எனப் பொருள்கள். எனவே, இரு வகையும் சரிதான். எனினும் நடைமுறையில் உள்ள சொல்லைக் கொண்டு கடைத்தேற்ற இயல் – Soteriology இங்கே குறிக்கப்பட்டுள்ளது. |
Soteriology |
442. கட்சி யியல் |
Stasiology |
443. கட்டக உயிரியல் |
Glycobiology |
444. கட்டட ஒலியியல் |
Architectural Acoustics |
445. கட்டட வளைசலியல் |
Arcology |
446. கட்டடக்கலைப் பொறியியல் |
Architectural Engineering |
447. கட்டடக் கலையும் அமைப்புப் பொறியியலும் |
Architecture And Structural Engineering |
448. கட்டுப்பாட்டுப் பொறியியல் |
Control Engineering |
449. கட்டுப்பாட்டு நுட்பியல் |
Control Technology |
450. கட்டுமானப் பொறியியல் |
Construction Engineering |
451. கணன இயல் Astrology என்பதைச் சோதிடம், சோதிட நூல், சோதிட வியல், சோசியம், யோசியம், (ஞ்)சோசியம், ஓராசாத்திரம் (தமிழ் ஓரையின் அடிப்படையில் உருவான சமற்கிருதச்சொல் ஃகோராசாத்திரம்), ஐந்திரம், கணிநூல், கணிப்பியல், கணியம், கணியவியல், கணியியல், நாட்டம், ஆரூடம், ஆரூடவியல், வானவியல், சித்தர் நூல் எனப் பலவகையாகக் கூறுகின்றனர். (ஆரூடம் என்பது தமிழ்ச்சொல்லே.) எனினும் நம் முன்னோர் விண்ணில் உழலும் கோள்கள் இயக்கத்தைக் கணக்கிட்டுக் கூறுதல் என்னும் பொருளில் கணனம் என்று சொல்லியுள்ளனர். கோள்கள் இயக்கத்தைக் கணக்கிட்டுக் கூறும் இச்சொல்லையே பின்னர், அதனடிப்படையில் ஒருவரின் வாழ்க்கையைக் கணிப்பதற்கும் பயன்படுத்தி உள்ளனர். நாம் கணனம் குறித்த அறிவியலைக் கணன இயல் எனலாம். Astrology என்பதைக் கணனவியலாக வரையறுத் துள்ளதால் astronomy என்பதைக் கணனவியலாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்கலாம். |
Astrology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply