ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 491 – 497 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 470 – 490 இன் தொடர்ச்சி)
491. அணுப் பொருள் உளவியல் கருப் பொருள் உளவியல் என்கின்றனர். கருப் பொருள் என்பது அணுக் கருவைக் குறிக்கிறது. இலக்கியக் கருப்பொருளுடன் குழப்பம் நேரக் கூடாது என்பதற்காக அணுப் பொருள் உளவியல் எனக் குறித்துள்ளேன். |
Atomistic Psychology |
492. கருஊன இயல் 493. பிறவிக்கோளாறு ஆய்வு, கருஊன இயல், இயல்பிறழ் கருவியல் எனப்படுகிறது. சுருக்கமான கருஊன இயல் – Teratology (2) இங்கே தரப்பட்டுள்ளது. சில அகராதிகளில் Terratology எனவும் இடம் பெற்றுள்ளது. எனினும் பெரும்பாலான விளக்கங்களில் இச்சொல் இடம் பெறவில்லை. பிறழ் கருவியல் என்னும் பொருளே உள்ளதால், தட்டச்சுப்பிழையாக இருக்கலாம். |
Teratology (2) |
494. கருவளர்இயல் |
Perinatology |
495. கருவாயியல் vulva பெண்குறியின் துவாரம், பெண்குறி, அல்குல், கருவாய், குய்யம், புணர்புழை, யோனிமடி, வல்வம், யோனி, யோனித் துவாரம் எனப்படுகிறது. இவற்றுள் யோனி என்பது நோனி என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்த சொல். அல்குல் என்பது பெண்குறியைக் குறிப்பதாகத் தவறாக விளக்கப்படுகிறது. இடைக்குக் கீழே சிறுத்துச் செல்லும் பெண்குறிக்கு மேற்பட்ட பகுதி. எனவே, பொருந்தாது. “அல்குல்: சங்க இலக்கியப் பாக்களில் இச்சொல் இடுப்பைத் தான் குறித்தது. பிற்காலத்தில் தோன்றிய புலவர்களோ வேறு பொருளில் வழங்கிவிட்டனர். வேறு பொருள் இன்னது என்பது தமிழ் அகராதியைக் கொண்டேனும் இராமாயணம் திருவிளையாடல் புராணம் திருக்கோவையார் முதலியவற்றை நோக்கியேனும் அறிந்து கொள்வீர்களாக!” என்பார் பேரா.முனைவர் சி.இலக்குவனார்(மாமூலனார் பாடல்கள் / சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்). குய்யம் என்பது மறைவாக உள்ள துளை என்னும் பொருளில் அமைந்த தமிழ்ச்சொல். புணர் புழை என்பது நேரடியாகச் சொல்லும் சொல்லாக இருப்பதால் பயன்படுத்துவதில் சிக்கல் வரலாம். கருவாய் என்பதுதான் இடக்கரடக்கலாக அமைகிறது. எனவே, கருவாய் என்பதன் அடிப்படையில் கருவாயியல் – Vulvology எனக் குறிக்கப்பட்டுள்ளது. |
Vulvology |
496. கருவிக் கட்டுப்பாட்டியல் |
Knobology |
497. சூலியல் Embryology கருவியல், கருவளரியல், கருவளர்வியல், கருவியல், கரு வளர்ச்சியியல், கருவியல் நூல், முளையவியல், சிசு வளரியல், முளயியல், மூலவுருவியல் எனப்படுகிறது. முளையியல் என்பதுதான் முளயியல் எனத் தட்டச்சு ஆகியிருக்கலாம். சிசு தமிழ்ச்சொல்லல்ல. embryon என்றால் கிரேக்கத்தில் பிறக்காத, கரு எனப் பொருள்கள். Cyesiology – சூல் ஆய்வு, கருத்தரித்தல் ஆய்வு, கருத் தங்கல் ஆய்வு, சினையாய்வு, சினைக்கால ஆய்வு, சினைப் பருவ ஆய்வு எனப்படுகின்றது. cyesis என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு பேறு, கருப்பம், சூல் எனப் பொருள்கள். fetus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கருப்பிண்டம். முச்சொற்களும் ஒரு பொருள் குறித்தனவே. சுருக்கமாகச் சூலியல் – Cyesiology எனலாம். |
Embryology/ Cyesiology / Fetology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply