(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  491 – 497 இன் தொடர்ச்சி)
498. கருப்ப இயல் káruon என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கருப்பம் . இதனை மரபுத்திரியியல் என இ.த.க.க.அகராதி, கால்நடை அறிவியல் துறை அகராதியில் இருந்து எடுத்துக் கூறுகிறது.  கருவியல் – embryology என்பதன் மறுசொல்லாகக் கருதலாம்.Karyology/Caryology
499. கலங்கரைவிளக்க இயல்Pharmacology(2)
500. கலைச்சொல்லியல்Terminology
501. கல்வி உளவியல்Educationa lPsychology
502. கல்வி நுட்பியல்Educational Technology
503. கல்விக் குமுகவியல்  Educational Sociology
504. கழிமுக வளைசலியல்Estuarine Ecology
505. கழுத்தியல்Trachelology
506. களப் பறவையியல்Field Ornithology
507. களை உயிரியல்Weed Biology
508. கற்பாசி யியல்Lichenology
509. கற்பிப்பியல்   Patrology – கிறித்துவத் தேவாலயத் தந்தையர்களின் கற்பிப்பு, உரை, எழுத்துகள் தொடர்பான இயல். எனவே, இதனைக் கற்பிப்பு இயல் > கற்பிப்பியல் – Patrology எனலாம். காண்க: ஆசானியல் -Pedagogy   Patrology

(தொடரும்)  இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000