(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  528 – 535  இன் தொடர்ச்சி)

536. வாயுவியல்

Aerology –  வளி மண்டல இயல், காற்றியல், மண்புழை யியல், வளிமண்டல ஆய்வு நூல், வளிமண்டலவியல், வளி மண்டலயியல், காற்று மண்டல ஆய்வியல் எனப்படுகிறது.

சில அகராதிகளில் மண் புழையியல் எனக் குறித்துள்ளனர். புழை என்றால் துளை எனப் பொருள். நான் பார்த்த எந்த ஒரு நூலிலும் மண்புழையியல் என்பதற்கான விளக்கம் இல்லை. இருப்பினும் அதைத் தனிப்பொருளாகக் குறித்துள்ளேன். பிற யாவும் சரியே. aero என்பதை வாயு என நாம் ஏற்றுள்ளதால் சுருக்கமாக

வாயு இயல் / வாயுவியல் – aerology எனலாம்.

ánemos என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் வாயு.

எனவே, Anemology என்றாலும் வாயுவியல் என்றுதான் பொருள்.

 Aerology(1)/ Anemology

537. வாயு நிலையியல்

வாயு அழுத்தவியல், காற்றழுத்தவியல்,  வளிம மிதவையியல் என்பனவற்றைவிட  வாயு நிலையியல் என்பது பொருத்தமாக இருக்கும்.

Aerostatics 

538. கானக நுண்ணுயிரியல்

Forest Microbiology

539. கானக வளைசலியல்

Forest Ecology

540. கானகப் பூச்சியியல்

Forest Entomology

541. கானகப் பொருளியல்

Forest Economics

542. கானகப் பொறியியல்

Forest Engineering

543. கிரெமிலின் இயல்

கிரெமிலின் (Kremlin) என்ற உருசியச் சொல் கோட்டை அல்லது கொத்தளம் எனக் குறிக்கும். உருசியாவின் நாடாளு மன்றம் அமைந்துள்ள மாசுகோ  கிரெமிலின் என்பதைக்   கிரெமிலின் என்று தான் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். இந்தக் கோட்டையில் உருசிய அதிபர் மாளிகை அமைந்துள்ளது. எனவே, உருசிய அரசியலின் குறியீடாகக்  கிரெமிலின் உள்ளது. எனவே, கிரெமிலினியல் என்பது உருசிய அரசியல் குறித்ததே. சோவியத்தியல் என்பதும் இது போன்றதே. எனினும் சோவி யத்து ஒன்றியம் பிரிந்தபின் சோவியத்தியல் என்பது சோவி யத்து ஒன்றியம் அமைவதற்கு முன்பிருந்த பொதுவுடைமை அரசுகள் குறித்ததாக உள்ளது.

Kremlinology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்
வகைமைச் சொற்கள் 3000