(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 536 – 543 இன் தொடர்ச்சி)

544. கிளைப்பாட்டியல்

காண்க: இனமரபு முறைமையியல்-Phylogenetic systematics

Cladistics

545. கிளைமொழியியல்

Dialectology

546. கிறித்துவியல் 

Christology

547. கீன்சியப்பொருளியல்

Keynesian Economics – கீன்சியப் பொருளியல், கெய்னீ சியன் பொருளியல் எனஇரு வகையாகக் கூறப்படுகிறது. யகரத்திற்கு அடுத்து னகரம் வராது. எனவே, கீன்சியப் பொருளியல் என்றே கையாள்வோம்.

Keynesian Economics

548. குகைஉயிரியியல்

Biospeleology

549. குகையியல்

Speleo – என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குகை.

Speleology / Spelacology / Spelaeology

550. குடலியல்

Entero – என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குடல்.

Enterology

551. குடல்சுரப்பியியல்

Enter= குடல்; adenology = சுரப்பியியல்;

Enteradenology

552. குடல் நோயியல்

Coloproctology

553. புழுவியல்

Helminthologyபுழுவியல், குடற்புழு அறிவியல், குடற்புழு நோயியல், குடல் புழுவியல், புழுவளி விளக்கம் எனப் படுகிறது. சுருக்கமாக நாம் புழுவியல் – Helminthology  எனலாம்.

hélminthos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குடற்புழு.

Helminthology

554. குடிமை யியல்

Civics

555. குடியேற்ற வியல்

குடியேற்றம் என்னும் பொருள் கொண்ட பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே Ekistics.

Ekistics

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்
வகைமைச் சொற்கள் 3000