(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 544 – 555 இன் தொடர்ச்சி)

556. குடும்ப உறவின் இயங்கியல்

Dynamics of family relationship

557. குடும்ப மரபியல்

Family genetics

558. குடும்பக் குமுகவியல்

Sociology Of Family

559. குடும்பப் பொருளியல்

Home economics

560. குண்டு ஏவியல்

ballista என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எறிதல். ஏவி எறிவதால் ஏவியல் எனக் குறிக்கப்பட்டது.

Bomb ballistics

561. குபரிக்கன் இயல்

தான்லி குபரிக்கு (Stanley Kubrick) சூலை 26, 1928 முதல் மார்ச்சு 7, 1999 வரையிலான காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒர் அமெரிக்கத் திரைப்பட இயக்கு நர். திரைக்கதை ஆசிரியர், பட ஆக்குநர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் முதலிய பன் முகத்தன்மை உடைவர். புதினங்கள், சிறுகதைகளைத் தழுவித் திரைப்படங்களை உருவாக்கிய செல்வாக்கு மிக்க இயக்குநராகத் திகழ்ந்தார். பன்முகச் சிறப்பு மிக்க இவரின் திரைக்கலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனித்துறையாக விளங்கும் இவ்வாய்வு குபரிக்கன் இயல் எனப்படுகிறது.

Kubrickology

562. குப்பையியல்

Garbology – கழிவியல், கழிவுப்பொருள் அறிவியல், குப்பையியல் என மூவகையாகக் குறிக்கின்றனர். கழிவுப் பொருள் என்னும் பொழுது ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருள் போன்றவற்றைக் கருதலாம். அவை மட்டும் குப்பை அல்ல. வீட்டிலிருந்தும் அலுவலகத்தி லிருந்தும் கடைகளில் இருந்தும் இவை போன்றும் வெளியேற்றப் படுவனவும் குப்பைதான். தெளிவும் சுருக்கமும் கருதி நாம்

குப்பையியல் Garbology என்றே கூறலாம்.

Garbology

563. குமுக அமைப்பியல்  

Social Physiology

564. குமுக உடம்பியியல்

Sociophysiology

565. குமுக உயிரியல்

Sociobiology

566. குமுக உளவியல்

Social Psychology

567. குமுக நுட்பியல்

Social Technology

568. குமுக நோயியல்

Social Pathology

569. குமுக மானிடவியல்

Social Anthropology

570. குமுக வடிவியல்

Morphology சொல் இடம் பெறும் துறைக்கேற்ப அமைப் பியல், வடிவியல், உருபனியல் எனப் பொருள்படுகின்றது.

Social Morphology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000