(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  584 – 593 இன் தொடர்ச்சி)

594. குறைமை இயல்

Defectology

595. குற்றவிய உளவியல்  

Criminal Psychology

596. குற்றவிய நுட்பியல்  

குற்றவழக்கு, குடிமை வழக்கு நடவடிக்கைகளுக்கு வழி வகுப்பது குறித்து ஆராய்வது என்பதால் குற்றவியப் பொறியியல் என்கின்றனர்.  குற்றவியப் பொறியியல் என்பதை விடக் குற்றவிய நுட்பியல் எனலாம்.  எனவே, தடவியப் பொறியியல் என்று கூறுவது இல்லை. காண்க:  Financial Engineering –  நிதி நுட்பியல்

Criminal  Technology

597. குற்றவியல்

Criminology

598. கூகுளியல்

Googleology

599. கூடுகளியல்

Kalia என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பறவை களின் கூடு.

Caliology

600. கூட்டணியியல்

Coalitionology

601. கூட்டுநுண்விசையியல்

Composite micromechanics

602. கூட்டுவாழ்வியல்

sumbíōsis  என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கூடி வாழ்தல்.

Symbiology

603. கூட்டு  வளைசலியல்

வேறுபடுத்திக் கூறுவதற்காக environmental  என்பதைச் சுற்றுச்சூழல் என்பதன் சுருக்கமாகச் சூழல் என்றும் ecology –  சூழீடு என்றும் குறித்திருந்தோம். ஆனால்  ecology  என்பதற்கு வளைசலியல் என வரையறுத்துப் பயன்படுத்தி வருவதால் அச்சொல்லையே இங்கேயும் பயன்படுத்தியுள்ளோம்.

உடன் என்னும் பொருளுடைய பழங்கிரேக்கச் சொல்லான sún என்பதிலிருந்து syn உருவானது.

Synecology(2)

604. கூட்டுச் செயல்முறை நுட்பியல்

Collaboration Technology

605. கூட்டுப் பெரும விசையியல்

Composite macromechanics

606. கூம்பகஇயல்

Pyramidology

607. கூம்பியல்

Conics–கூம்பியல், கூம்பு வடிவியல் என இருவகையாகக் கூறுகின்றனர். சுருக்கமான

கூம்பியல் – Conics  என்பதையே பயன் படுத்துவோம்.

Conics

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000