(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  594 – 607 இன் தொடர்ச்சி)

608. கூலவியல்

céréale என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூலம் (தானியம்)தொடர்பான.

Cerealogy/ Cereology

609. கூளவியல்

crappe என்னும் பழம் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் கூளம்(குப்பை).

Crapology

610. கெலுடிக்கு சடங்கியல்

பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் கி.மு.500 முதல் கி.பி. 500 வரை இருந்த மொழி, அம்மொழி பேசும் மக்கள், அவர்களின் சமயம் கெலுடிக்கு ஆகும். இச்சமயச் சடங்குகளை ஆராயும் துறை கெலுடிக்கியல். கெலுடிக்கு(Celtic) சமயத் தலைவரை துரூயிடு என்பர்(Druid).

Druidology

   

611. கேட்பியல்

Audiology–கேட்பியல், கேட்டலியல், கேள் உணர்வு இயல், கேள்திறனியல், செவி யுணர்மை யியல் எனப் பலவகையாகக் கூறப்படுகின்றது.

 கேள் என்னும் பொருளுடைய audīre என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து இச்சொல் பிறந்தது. எனவே, சுருக்கமான

கேட்பியல் – Audiology என்பது ஏற்கப் பெற்றுள்ளது.

Audiology

612. கேட்பொலிப்பியல்

AuditoryPhonetics

613. கையெழுத்தியல்

Graphology – கையெழுத்தியல், கையெழுத்து ஆளுமையியல், கையெழுத்து உளவியல், நுகியல் எனப்படுகின்றது.

நுகு என்பது கணக்கில் குறிவரைபடத்தைக் (Graph) குறிப்பது. இங்கே பொருந்தாது. எழுதுநரின் பண்புநலன்களை அவர் எழுதும் பாங்கைக் கொண்டு அறியும் இயலே இது. எனவே, கையெழுத்து தொடர்பானவையே சரி. இவற்றுள் கையெழுத்தியலே சுருக்கமாக உள்ளது.

Graphology

614. கையெழுத்து நோயியல்

 கையெழுத்து நோயியல் என்றால் கையெழுத்து மூலமாக நோயை அறியும் ஆராய்ச்சித் துறை எனப் பொருள் கொள்ள வேண்டும். எனவே,  நோயறி கையெழுத்தியல் என்றும் சொல்கின்றனர். கையெழுத்தின் மூலம் ஒருவரின் நோய்ப்பண்பை அறிய இயல்வதால் கையெழுத்துப் பண்பியல் என்றும் குறிக்கின்றனர்.

Graphopathology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000