(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  608 – 614  இன் தொடர்ச்சி)

615. கைவரிஇயல்

chiro-  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கை.உள்ளங்கையில் உள்ள கோடுகள்/வரிகள் – இரேகைகள் மூலம் ஒருவரின் எதிர்காலத்தைக் கணிக்கும் கலையைக் குறிக்கிறது. எனவே, கைவரியியல் எனலாம்.

Chirology

616. கைவினைநுட்பியல்

Craft Technology

617. கொடியியல் 

vexillum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கொடி. எனவே கொடியியல் – Vexillology எனப்பட்டுள்ளது.

Vexillology

618. கொப்பூழ்க்கொடி இயல்

placenta  என்பதை அணையம், ஊட்டத்திண்டு, ஒட்டிடம், கருக்குடை, கருவளர் படலப்பை, கருவீடு,  கொடிவேர், சூலொட்டு திசு, சூலொட்டுத்திசு, சூல்ஒட்டுத் திசு, சூல்கொடி, சூல்மெத் திருக்கை, சூல் வித்தகம், தாய்சேய் இணைப்புத்திசு, தொப்புட் கொடி, தொப்புள் கொடி, நச்சுக்கொடி, நஞ்சு, நஞ்சுக்கொடி, நாபிக் கொடி, பனிக்குடம், பிள்ளைநஞ்சு எனப் பலவாறாகக் குறிப்பிடு கின்றனர். இக்கொடியின் அமைப்பு, செயல்பாடுபற்றிய அறிவியல் ஆய்வு இத்துறை.

(ஒற்றுப்பிழை உள்ள வற்றையும் இங்கே குறித் துள்ளோம். திசு என்பதை நாம் மெய்ம்மி எனக் குறிப்பிட்டாலும் அகராதியில் உள்ளபடி இங்கே குறித்துள்ளோம்.) இங்கே குறிப்பிட்டுள்ளவற்றை வெவ் வேறாகக் கருதுபவர்களும் உள்ளனர். இவற்றுள் ஒன்றைக் குறிப்பிட்டு மற்றொன்றை வலியுறுத்தும் போக்கு வருவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது.  எனவே, இங்கே குறிக்கப்படாத கொப்பூழ்க் கொடி என்பதைக் குறித்துள்ளோம். அப்படியானால் இது மற்றொரு புதுச்சொல்லாகப் பட்டியலில் சேரலாமே என்று ஐயம் வரலாம். அவ்வாறு கருதக்கூடாது என்பதே வேண்டுகோள்.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்பூ

என்கிறது பரிபாடல் (ஏழாம்பாடல், அடி 1). சங்க இலக்கியச் சொல்லையே நாம் குறித்துள்ளோம்.

Placentology

619. கொரியஇயல்

Koreanology

620. கொலைவிளைவு இயல்

Killology

621. கொள்ளை நோயியல்

Epidomology / Lemology

622. கோட்பாட்டியல்

arch/archo என்னும் இலத்தீன் சொற்களின் பொருள்கள் முதல்/தொடக்கம்.

இதனடிப்படையில் முதற்கோட்பாட்டியல் எனப்படுகிறது. எனினும் கோட்பாட்டியல் என்றால் போதுமானது.

Archelogy / Archology 

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000