(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  615 – 622 இன் தொடர்ச்சி)

623. கோட்பாட்டு உளவியல்

நேர்பொருள் தூய உளவியல் என்பதாக இருந்தாலும் கோட்பாடு சார்ந்த இயல் என்பதால் கோட்பாட்டு உளவியல் எனப்படுகிறது.

Pure Psychology

624. கோபுர இயல்

Pyrgology

625. கோமாளி யியல்

Clownology

626. கோரைப்புல்லியல்

Caricology

627. கோல்

Metre

628. கோழிப்பண்ணைப் பொருளியல்

Poultry economics

629. கோழியின மரபியல் 

Poultry genetics

630. கோளியல்

Planetology

631. கோள் இயற்பியல்

Planetary physics

 

632. கெளசிய ஒளியியல்

Gaussian optics

 

633. ங கதிர் படிகவியல்

எக்சு கதிர் படிக வரைவியல், X-கதிர்ப் பளிங்கியல், x-கதிர்ப்புகவியல், X-கதிர்ப் பளிங்கு வரைபியல், X – கதிர் படிகவியல், X-கதிர்ப்படிகவியல், ஊடுகதிர்ப் படிகவியல், புதிர்க்கதிர்ப் படிகக் கட்டமைப்பியல் எனப் படுகின்றன. பலவற்றுள் எக்குசு என்னும் ஆங்கில எழுத்தை அவ்வாறே யன்படுத்தியுள்ளனர். புதிர்க்கதிர் அல்லது ஊடு கதிர் எனக் கூறப்பட்டாலும் நான் வேறொரு கட்டுரையில் ‘ங’ கதிர் எனக் குறிக்குமாறு குறிப்பிட் டிருப்பேன். Crystallography என்பதைப் படிகவியல் என மேலே தெரிவித்திருப்போம். இவற்றினடிப்படையில்

ங கதிர் படிகவியல் –x-ray crystallography எனலாம்.

   

X-ray crystallography

634. சகுனவியல்

Omen  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிமித்தம்/சகுனம்.

நிகழப்போவதை முன் கூட்டியே அறிவிப்பதாக ஒருவர் நம்பும் நிகழ்வு, பேச்சு போன்றவை. நல்லது நடக்கப் போவது என்பதை உணர்த்துவதாக நம்பினால் நன்னிமித்தம் / நற்சகுனம். தீயதை உணர்த்துவம் அமங்கல நிகழ்வு, அல்லது பேச்சு எனக் கருதினால் தீ நிமித்தம்/ அபசகுனம்.          

Omenology

635. சங்கு இயல்

concha என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சங்கு.

Conchology

636. சட்டக் குமுகவியல்

Sociology Of Law

637. சட்டச் சொற்றொடரியல்

Legal Phraseology

638. சதியியல்

Conspiratology

639. சதுப்புநிலவியல்

தொல் மேற்குச் செருமனிச் சொல் telma இன் பொருள் சதுப்புநிலம்.

Telmatology

640. சதுரங்க இயல்

அரசர் என்னும் பொருள் கொண்ட பழம் பிரெஞ்சுச் சொல்லில் இருந்து உருவானதே Chess. அரசரின் வெற்றி தோல்விதானே ஆட்டத்தின் வெற்றி தோல்வி. எனவே, அரசர் சொல்லை அடிப்படையாகக் கொண்டு Chess என்றனர்.

 தமிழில் சதுரங்கம் என்பதுடன் யானைக்குப்பு > யானைக்கும்பு என்றும் சொல்வர். குப்பு என்றால் அணிவகுப்பு என்று பொருள். யானை அணிவகுப்பு என்ற பொருளில் சதுரங்க ஆட்டத்தைக் குறிப்பிடுவர்.

Chessology

(தொடரும்) 
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000