(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  658 – 663 இன் தொடர்ச்சி)

664. சிறப்புச் சொல்லியல்

gélōs, gélōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் சிரிப்பு.

onomato-என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் பெயர், சொல். இங்கே சிறப்புச் சொல்லைக் குறிக்கிறது. சிறப்புச் சொல் தோற்றவியல் என முதலில் குறித்திருந்தேன். இப்பொழுது சுருக்கிச் சிறப்புச்சொல்லியல் எனக் குறித்துள்ளேன். சொல்லியல் என்றால் வேர்ச் சொல்லியல் முதலியவற்றோடு குழப்பம் நேரலாம். எனவே, அவ்வாறு குறிப்பிடவில்லை.

Onomatology 

665. சிறு கோல்

centimetre

666. சிறு தட்பியல்

காண்க : தட்பியல்-Climatology

Microclimatology

667. சிறு  வளைசலியல்    

Microecology

668. சிறு நகர்வியல்

Microtectonics

669. சிறு வடிவியல்

Micromorphology

670. சிறு வானிலையியல்

Micrometeorology

671. சிறுநீரகவியல்

nephro- என்னும் பழங் கிரேக்கச் சொல் சிறு நீரகத்தையும் சிறுநீரகம் தொடர்பான வற்றையும் குறிக்கிறது.

சிறுநீரகத்தின் செயற்பாடு, சிறுநீரகச் சிக்கல்கள், சிறுநீரகக் குறைபாடுகளுக்கான மருத் துவம், சிறுநீரக மாற்றமைப்புப் பண்டுவம், முதலியனவற்றை ஆய்வு செய்யும் மருத்துவத் துறையை யே நாம் சிறுநீரக வியல் என்கிறோம்.

Nephrology

672. சிறுநீரியல்

சிறுநீர் ஆய்வியல், சிறுநீர் ஆய்வு நூல், சிறுநீராய்வியல், சிறுநீர் ஆய்வு நூல், சிறுநீர் இயல், சிறுநீர்ப் பாதையியல் எனக் கூறப்படுகின்றன.

Oûron என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சிறுநீர்.

oûron என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து உருாகிய uro- என்னும் முன்னொட்டுச் சொல் சிறுநீரையும் சிறுநீர்த் தொடர் பானவற்றையும் குறிக்கும்.

மேற்குறித்தவற்றுள் சுருக்கமான சிறுநீரியல் Urinology / Ourology/ Urology

என்பதை நாம் பயன் படுத்தலாம்.

Urinology / Ourology/ Urology

(தொடரும்) 
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000