(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  673 – 682 இன் தொடர்ச்சி)
683. சுவடி இலக்கியவியல்Papyrology
684. சுழலியக்கவியல்Gyroscopics
685. சுழலியல்Gyrostatics
686. சுழல் இயங்கியல்Gyro dynamics
687. சுழல் காந்தவியல்Gyromagnetics
688. வளைசலிய ஆற்றலியல்Ecological energetics
689. சூரிய அதிர்வியல்Helioseismology
690. சூரிய இயல்Heliology
691. சூழிய
Environmental – சுற்றாடல், சுற்றுச்சூழல் சார்ந்த, சுற்றுச்சூழல், சூழ்நிலை,   சுற்றுப்புறம், சுற்றுப்புற, சுற்றுப்புறச் சூழ்நிலை, சூழல், சூழ்நிலைக்கான, புறச்சுற்று,  வலிதம் எனப் பலவகையாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் வலிதம் என்பது சுற்றுப்புறத்தைக் குறிக்கும் யாழ்ப்பாண வழக்கு. இவற்றின் அடிப்படையான சூழியல் என்பதைச் சுட்டும் வகையில் சூழிய – environmental என இங்கே குறிக்கப்பட்டுள்ளது.
Environmental
692. சூழிய நச்சியல்Environmental Toxicology
693. சூழிய அறவியல்Environmental Ethics
694. சூழிய உயிரிய நுட்பியல்Environmental Biotechnology
695. சூழிய உயிரியல்Environmental Biology
696. சூழிய உளவியல்Environmental Psychology
697. சூழியத் தகவலியல்Environmental Informatics
698. வளைசநல நுட்பியல்Eco Friendly Technology
699. வளைச நுட்பியல்         Ecotechnology
700. வளைச மரபியல்Ecological Genetics
701. சூழிய முருகியல் காண்க: முருகியல்Environmental Aesthetics
702. சூழியப் புள்ளியியல்Environmental Statistics
703. சூழியப் பொருளியல்Environmental economics
704. சூழ்முறைமை வளைசலியல்Ecosystem Ecology
705. சூழ்மை  உடம்பியியல்
Ecophysiology – சுற்றுப்புற உடலியல். சூழல்சார் உடலியங்கியல்  என இரு வகையாகக் கூறப்படுகிறது. Ecophysiology  என்பது environmental physiology என்னும் பொருளில்தான் பயன்படுத்தப் படுகிறது. எனவேதான் இருவகையாகவும் குறிக் கின்றனர். சூழ்நிலைக் கேற்றவாறு உடலில் ஏற்படும் நிலைமைகளை ஆராய்வதால் சூழ்மை  உடம்பியியல் – Ecophysiology எனலாம்.  
Ecophysiology

(தொடரும்)  இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000