ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 803 – 819 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 780 – 802 இன் தொடர்ச்சி)
803. தாங்குட்டியல் தாங்குட்டு(Tangut) மக்களின் மொழி, கலை, பண்பாடு, வரலாறு முதலியன குறித்து ஆராயும் துறை தாங்குட்டியல் எனப்படுகிறது.
தாசியா இயல்(Dacology) என்பது திரேசியலின்(Thracology ) ஒரு பிரிவாகும். பழைய உரோமானியப் பேரரசின் தாசியா நாட்டு மக்களின் மொழி, இலக்கியம், வரலாறு, சமயம், கலை, பண்பாடு, பொருளியல், நெறிமுறைகள் குறித்து ஆராயும் துறையே தாசியா இயல். |
Tangutology Dacology |
805. தாடைஎலும்பியல் தாடை எலும்பு என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் Siagonology சொல் உருவானது. |
Siagonology |
806. தாதுசார் நோயியல் |
Humoral Pathology |
807. தாந்தே இயல் |
Dantology |
808. தாமிரக் குளவியியல் Chalcidology – தாமிரநிறக் குளவியியல் > தாமிரக் குளவி யியல் khalkos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தாமிரம் / செம்பு. இதன் நிறம் உடைய குளவி இதே பொருளில் Chalcid என அழைக்கப்பெறுகிறது. தாமிரக் குளவி யியல் – Chalcidology எனலாம். |
Chalcidology |
809. தாவர உயிர்மி யியல் |
Plant Cytology |
810. தாவர உள்ளியல் |
Phytotomy |
811. தாவர நுண்ணுயிரி வகை |
Spirogyra |
812. தாவர நோயியல் |
Phytopathology |
813. தாவர வடிவியல் |
Plant morphology |
814. தாவர வரைவியல் |
Phytography |
815. தாவரக் குமுகவியல் |
Phytosociology |
816. தாவர வளைசலியல் |
Plant Ecology |
817. தாவரத் தொல்லியல் |
Palynology (2) |
818.தாவர நோய்ம யியல் |
Phytobacteriology |
819. தாவரப் புவி யியல் Phyto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தாவரம். Geographia என்னும் இலத்தீன், பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் புவி. எனவே, தாவரப் புவியியல். ஆனால், அச்சுப்பிழையாகக் கருதும் வகையில் ஓர் அகராதியில் உடற்பண்டுவ இயல் எனக் குறிக்கப்பெற்று மற்றொரு தொகுப்பு அகராதி யிலும் இடம் பெற்றுவிட்டது. முதலில் நான் ஆராயாமல் இதைக் குறித்து விட்டேன். பின்னர்த் தவற்றினை உணர்ந்து திருத்தியுள்ளேன். சிலர் புவித்தாவர இயல் என்கின்றனர்.அதனினும் தாவரப்புவியியல் என்பதே ஏற்றது. |
Phytogeography
|
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
Leave a Reply