(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  928 – 947 இன் தொடர்ச்சி)
948. நன்னியல் agathós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நல்ல.  நன்மைதரும் நல்லன பற்றிய இயல் என்பதால் நன்னிலை எனப்பட்டது.Agathology
949. நன்னீருயிரியல்   limno என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் ஏரி, குளம் என்பன. புதுநீர் உள்ள நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களைப் பற்றிய இயல். எனவே நன்னீருயிரியல் எனப்பட்டது.Limnobiology
950. நன்னீர் வளைசலியல்   Fresh Water Ecology – நன்னீர்ச் சுற்றுப்புறவியல், நன்னீர்ச் சூழலியல், புதிய நீர்ச் சூழலியல் எனக் கூறப்படுகிறது. Ecology வளைசலியல் என வரையறுத்துள்ளதால், நன்னீர் வளைசலியல் – Fresh Water Ecology எனலாம்.Fresh Water Ecology
951. நாக்கியல்   காண்க: அருஞ்சொல்லியல்  – Glossology(1)Glossology(2)
952. நாடி இயல் artēria  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நாடி/சிரை. Phléps என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நாடி. இருவகையாகவும் நாடியியல் குறிக்கப்படுகிறது.Arteriology / Phlebology
953. நாடித்துடிப்பியல் sphugmós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நாடித் துடிப்பு.Sphygmology
954. நாட்காட்டியியல் hēmérā என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நாள். பின் இது நாள்களைக் குறிப்பிட்டுக் காட்டும் நாட்காட்டியைக் குறித்தது.Hemerology
955. நாட்டுப்புற மொழியியல்Folk Linguistics
956. நாட்டுப்புறக் கதையியல் story என்றால் கதை என்பதை அறிவோம். எனினும் தொடக் கத்தில் சமக்கால கதை களைவிட நாட்டுப் புறக் கதைகளே சொல்லப்பட்டன. எனவே, நாட்டுப் புறக் கதைகளைக் கூறும் இயல் என்னும் பொருளில்   Storiology எனக் கையாண்டுள்ளனர்.Storiology
957. நாட்பட்ட  நோய்த் தொற்றியல்Chronic diseaseepidemiology
958. காசியல் Numismatology/Numismatics – காசியல், நாணயம், பதக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சித் துறை, நாணயவியல், நாணயம் பற்றிய ஆய்வு நூல் எனப்படுகின்றது. இவ்வியல் நாணயங் களையும் நாணயங்களாகப் பயன்பட்ட பொருள்களையும் பணத்தாள்களையும் பதக்கங்கள், தாள் பணங் களையும் பற்றிய ஆய்வு nomisma என்னும் இலத்தீன் / கிரேக்கச்சொல்லிற்குக் காசு/நாணயம் எனப் பொருள்கள். எனவே, சுருக்கமாகக் காசியல் – Numismatology / Numismatics எனலாம். காசு என்றால் சில்லறைக்காசு என எண்ணாமல் நாணயமாகக் கருதப்படும் அனைத்தையும் கருதவேண்டும்.Numismatology / Numismatics
959. நாயியல்   kúōn என்னும் இலத்தீன் / பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் நாய். இதன் வழி வந்த சொல்லே cyno.Cynology
960. நாயினவியல்Ethnocynology
961. நாவாய்ப்பூச்சி யியல்   hemipterus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அரை இறக்கைகள். நாவாய்ப் பூச்சிகளைக் குறிக்கிறது.Hemipterology

(தொடரும்

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000