ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1314 – 1329 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1301 – 1313 இன் தொடர்ச்சி) |
1314. புவியக இயங்கியல் |
Geodynamics |
1315. புவியியல் |
Geology |
1316. புவிவள நுட்பியல் |
Earth resources technology |
1317. புள்ளிகணத் திணைஇயல் |
Point set topology |
1318. புள்ளியிய உளவியல் |
Statistical Psychology |
1319. புள்ளியிய வயணஇயல் |
Statistical Methodology |
1320. புள்ளியியல் புள்ளி இயல், புள்ளி விவரங்கள் இயல், புள்ளித் தொகுப்பியல், புள்ளிவிவர வியல், புள்ளிவிவரம், புள்ளி விளக்கம், புள்ளிவிவர அறிவியல் எனப்படுகின்றது. தமிழில் புள்ளிவிவரம் / புள்ளி விளக்கம், புள்ளியியல் எனத் தனித்தனியே குறிப்பிடினும் ஆங்கிலத்தில் Statistics என்னும் ஒற்றைச் சொல்லாலேயே இரண்டையும் குறிக்கின்றனர். புள்ளிவிளக்க அறிவியலை நாம் தமிழில் சுருக்கமாகப் புள்ளியியல் – Statistics எனலாம். |
Statistics |
1321. புற உயிரியல் Exobiology– புறமண்டிலவியல், புறவெளி உயிரியல் எனப் படுகின்றது. புறவெளியில்/புற மண்டிலத்தில் உள்ள உயிரிகள் குறித்த இயலைச் சுருக்கமாகப் புற உயிரியல் எனலாம். |
Exobiology |
1322. புற ஏவியல் ballista என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஏவு/எறி. |
Exterior Ballistics |
1323. புறஉறுப்பு நோயியல் |
Acropathology |
1324. புறக் கோளியல் |
Exoplanetology |
1325. புறப் பொருளியல் |
Economics, external |
1326. புறமண இனஉறுப்பியல் Praxeology என்பதைத் தத்துவத் துறையிலும் பாலியல் துறையிலும் உற்பத்தி உறவியல் என்று குறிப்பிடுகின்றனர். இது திருமண உறவிற்குப் புறம்பாக இனப்பெருக்க உறுப்புகளைப் பயன்படுத்துவது குறித்த இயலாகும். எனவே, சுருக்கமாக (உற்பத்தி உறவியல் என்று சொல்லாமல்) புறமண இன உறுப்பியல் எனலாம். |
Praxeology(2) |
1327. புறவடிவ நகர்வியல் |
Morphotectonics |
1328. புறவெளித் தொல்லியல் |
Exoarcheology(2) |
1329. புற்களியல் grāmen என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் புல். |
Graminology |
(தொடரும்)
Leave a Reply