(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1391  – 1400 இன் தொடர்ச்சி)

1401. மண் ஆய்வியல் 

pedo-என்னும் பழங்கிரேக்க முன்னொட்டுச் சொல் மண் தொடர்பான என்பதைக் குறிக்கிறது. (உயிரெழுத்திற்கு முன் ஓ/O வராது.)

Pedogenics

1402. மண்உயிரியல்

Soil biology

1403. மண்டலப் புவியியல்           

Regional Geology

1404. மண்டலப் பொருளியல்

Regional Economics

1405. மண்டையோட்டியல்

cranium என்னும் இடைக்கால இலத்தீன் சொல்லின் பொருள் மண்டையோடு.

Craniology / Fronology

1406. மண்ணியல்

Agrology  என்பதையும் மண்ணியல் என்கின்றனர். ஆனால், அதை மண்ணியலின் ஒரு பகுதியாக வேளாண் மண்ணியல் என்கிறோம்.

Edaphology / Pedlogy / Pedology(1)

1407. மண்ணீரலியல்

splḗn  என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மண்ணீரல்.

Splenology

1408. மண்புழுஇயல்

Oligochaetology

1409. மண்புழையியல்

Aerology(2)

1410. மதக்கோட்பாட்டியல்

dogma என்பது இலத்தீனிலும் கிரேக்கத்திலும் கோட்பாட்டைக் குறிக்கிறது. எனினும் இங்கே மதக்கோட்பாட்டைக் குறிக்கிறது.

Dogmatology

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000