(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1401 – 1410 இன் தொடர்ச்சி)

1411. மதலையியல்

neonātus என்னும் இலத்தீன் சொல் பச்சிளங்குழந்தையைக் குறிக்கிறது. அண்மையில் பிறந்த மழலையரைக் குறிக்கும் மதலை என்னும் சொல்லைக் கையாண்டுள்ளோம்.

Neonatology

1412. மதிப்புச்செய்திறனியல்

மதிப்பு மேலாண்மைக்கு ஒத்ததாக இது கருதப்படுகிறது. செயல்பாட்டை மேம்படுத்து வதன் மூலம் செலவையும் குறைத்து மதிப்பை உருவாக்குவது குறித்த செய்திறன்துறை. எனவே, இதனை மதிப்புப் பொறியியல் என்று சொல்வதைவிட, மதிப்புச் செய்திறனியல் எனலாம்.

Value Engineering

1413. மதுக்காய்ச்சியல்

brew  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மது வடிப்பு.

Brewology

1414. மதுக்கலவையியல்

Mix என்னும் சொல்லின் நேர் பொருள் கலத்தல். எனினும் இங்கே மதுக்கலவையைக் குறிக்கிறது.

Mixology

1415. மதுவியல்

eno- / œno-  என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் மது.

Enology / Oenology

1416. மர ஒளி வரைவியல்

Photoxylography

1417. மர நுட்பியல்

மரக்கட்டைத் தொழில்நுட்பம் மரக்கட்டை நுட்பியல், மரத் தொழில்நுட்பம் எனப்படுகின்றது.

 தொழில் நுட்பவியல் என்பதை நான் சுருக்கி நுட்பியல் எனக் குறித்து வருகிறேன். எனவே,  மரக்கட்டைத்தொழில் நுட்பத்தை மரக்கட்டை நுட்பியல் என்றேன்.

அறைகலன் முதலான மரப்பொருள் ஆக்கத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்த அறிவியல் இது. மரக்கட்டை என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. இதற்கு அடிப்படை மரம்தான். எனவே, சுருக்கமாக மரப்பொருள் நுட்பியல் > மர நுட்பியல் என மாற்றியுள்ளேன்.

Wood technology

1418. மரங்கொத்தி யியல்

Woodpeckerology

1419. மரணத்தண்டனை இயல்

Ktenology

1420. மரபணுக்கட்டுப்பாட்டு நுட்பியல்

Gene manipulation technology

1421. மரபணு வளைசலியல்

Gene Ecology

1422. மரபியல்

Genetics

1423. மரபு வளைசலியல்

Genecologyசூழல்சார் பரம்பரையியல், மரபு இயைஇயல், மரபு இயைபியல், பிறப்புச்சூழலியல் எனப் படுகின்றது.

Ecology என்பதை வளைச லியல் எனக் கூறலாம் என வகுத்துள்ளோம். எனவே,

மரபு வளைசலியல் – Genecology எனலாம்.

Genecology

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000