481. கணக்குமானி – arithmometer :  கணிப்புமானி எனச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி கூறுகின்றது. கணக்குமானி என்பதே ஏற்றதாக இருக்கும்.

482. கதிரலகுமானி  – roentgen meter :ங-கதிர் அல்லது ஞ- கதிர் (x-rays or γ-rays)களின் திரள் அளவை அளவிடும் கருவி.கதிர்வீச்சு அலகினை (roentgen) அளவிடுவதால் கதிர் அலகுமானி> கதிரலகுமானி எனலாம்.

483. கதிரலைவுநோக்கி  –  ray oscilloscope

484. கதிருமிழ்வுமானி  –  emanometer

485. கதிர்ப்பு நோக்கி –   spinthariscope  :  ஊடிழை கதிர்த்திரை , நீளலை மினுக்கத்தால் கதிரியக்க ஊடிழை மின்துகள் பாய்வு விளக்கிக்காட்டும் துத்தகந்தகித் தகட்டமைவு . (-செ.) ஆல்ஃபா துகள் பளபளப்பு காண்கருவி (-இ.), சுடர்காட்டி (-ஐ.) என வெவ்வேறு பெயர்களில் கூறப்படுகின்றது. அகரத்துகளிலிருந்து ஒளிப்பொறிகளை எடுத்து கதிர்ப்பினைக் (radiation) கண்டறிவது. ஆதலின் கதிர்ப்பு நோக்கி எனலாம். (அகரத்துகள் அடிப்படையில், அகரத்துகள்நோக்கி என்றால், சொற்சீர்மை கிடைக்காது.)

486. கதிர்ப்பு வெப்பமானி  – radiation thermometer

487. கதிர்வளி நிறமாலைமானி – helium spectrometer

488. கதிர்வளி காந்தமானி – helium magnetometer

489. கதிர்வீச்சு தழல்மானி-   radiation pyrometer

490. கதிர்வீச்சு அளக்கைமானி – radiation survey meter

491. கதிர்வீச்சுமானி – actinometer :                   கதிர்வீச்சுச் செறிவை அளக்கும் கருவி.(-மூ.9) ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஒளி-வெப்பமானி,  கதிரிய வெப்பச்செறிவளவி, ஞாயிற்று ஆற்றல் செறிவுமானி, மின்காந்தக் கதிர்வீச்சுமானி எனப் பலவகையாகக் குறிப்பிடுகின்றனர். கதிர்வீச்சு மானி   எனச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

 492. கதிரலை உறழ்மானி – radio interferometer

493. கதிரலை நுண்மானி – radiomicrometer

494. கதிரவ நோக்கி – helioscope  :  கண்ணுக்குக் கேடின்றிக் கதிரவன் மண்டலத்தைக் காண்பதற்கு உதவும் கருவி. சூரிய தொலைநோக்கி (-இ.), கதிரவ நோக்கி(-இ.) என்பனவற்றுள் சுருக்கமான கதிரவ நோக்கியையே பயன்படுத்தலாம்.

495. கதிரவ வரைவி – heliograph: சூரியஒளி வரைவி, சூரியஒளி நேரப்பதிப்பி, சூரியக்கதிர் தொலைவரைவி என வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர். கதிரவனின் ஒளிக்கதிர்களை எதிரொளிக்கச்செய்து செய்திகளை அனுப்ப உதவும் கருவி. கதிரவன் ஒளி வரைவியைச் சுருக்கமாகக் கதிரவ வரைவி எனலாம்.

496. கதிரவ வெயில்மானி – pyroheliometer:    கதிர் வெப்பமானி, கதிரவ அனல்மானி எனக் குறிக்கப்படுகின்றது. சொற்சீர்மை கருதிக் கதிரவ வெயில்மானி எனலாம்.

497. கதிரவமானி – heliometer     கதிர்மண்டல விட்டத்தையோ விண்மீன்களிடைத் தொலைவையோ அளக்கும் கருவி. ஞாயிற்று விட்டஅளவி(-இ.), கதிரவமானி(-இ.), குறுக்கைமானி(-செ.) எனக் குறிப்பிடுகின்றனர். பயன்பாட்டு அடிப்படையில் எல்லாம் சரிதான். எனினும் சுருக்கமான கதிரவமானி என்பதை ஏற்கலாம்.

498. அளபுமானி  – quantimeter : கதிர்வீச்சு அளவினைக்கணக்கிடும் கருவி. அளவுமானி (ம.க.பே.) எனப்படுகிறது. ஆனால்,    பாய்மத்தின் அளவை அளவிடும்(quantity meter) கருவி அளவு மானி எனக் குறிக்கப்பெறுவதால் அளபுமானி எனலாம்.

499. கதிரி – radiator : காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப (சிறுபாணாற்றுப்படை – 10) என்னும் அடியில் கடாவு என்பது செலுத்துதலைக்(Emitting, throwing out) குறிக்கிறது. ‘ரேடியேட்டர்’ என்பதற்குக் கடாவு என்னும்   சொல்லே மிகப் பொருத்தமாக அமையும்.radiator என்பதற்கு உமிழி, கதிர்வீசி, கதிர்வீசுக் கருவி, கதிர்வீச்சுக் குளிர்விப்பான், வெப்பக்கதிர் வெளியேற்றி, வெப்பம்வீசி, வெப்பாற்று அமைவு எனப் பலவகையான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடாவுதல் அடிப்படையில் கடாவி என்பதே சரியான சொல்லாக அமையும். ஆனால், சொல்லப்படுகின்ற சொற்களில் ஒன்றாக இல்லாமல் புதியதாக உள்ளதால், வேறு ஏதோ ஒன்றைக் குறிப்பதாக எண்ணுவர். எனவே, கதிர் என்பதன் அடிப்படையில் பொதுவாகக் கதிரி எனலாம். பயன்பாட்டு நிலையில் மாற்றம் இருந்தாலும் கதிரி என்பதன் அடிப்படையிலேயே பொருளைப் புரிந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இதனடிப்படையிலான பிற சொற்களையும் காணலாம்.

  கதிரிப் புழைக்கதவு-radiator grill;  கதிரி மூடி-radiator cap; கதிரி விளக்கு-radiator lamp; கதிரி வெப்பநிலைத்தாழ்ச்சி –radiator temperature drop; கதிரிக் கோபுரம்-radiator tower ; கதிரிக்குழாய்-radiator tube; கதிரிச்சாத்தி-radiator shutter; கதிரித்தூரிகை-brass radiator; கலக்கதிரி-cellular radiator; தேன்கூட்டுக் கதிரி- honeycomb radiator;  நாடாக் கதிரி-ribbon radiator எனக் கதிரி தொடர்பான சொற்களைக் குறிக்கலாம்.

500. கதிரி வெப்பமானி  – radiator thermometer

501. கதிரிக் குறிப்பி – radiator indicator

502. கதிரிய அழுத்தமானி – nichols radiometer : கதிரிய அழுத்தத்தை அளவிடுவதற்காக 1901 இல் ஏர்னசுட் ஃபாக்சு நிக்கோலசு(Ernest Fox Nichols ) கார்டன் ஃபெர்ரி உல் (Gordon Ferrie Hull)ஆகியோரால் பயன்பாட்டிற்கு வரப்பெற்றது.

503. கதிரிய வானிலை வரைவி – radio-meteorograph

504. கதிரியக்க வீத மானி – dose-rate meter :கதிரியக்க ஏற்புவீத மானி > கதிரியக்க வீத மானி

505. கதிரியக்கமானி  – dosimeter : ஒருவர் பெற்றுள்ள கதிரியக்கத்தின் அளவினை அளவிடுவதற்கான கருவி. (-ம.229)

506. கதிரியத் தொலைநோக்கி – radio telescope;வானொலி தொலைநோக்கி, கதிரியத் தொலைநோக்கி, வானொலி நிகழ்வெண், தொலைநோக்கி, வானலை மூலம் இயக்கப்படும் தொலை நோக்கி, கதிர்வீச்சுத் தொலைநோக்கி, என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர்.  வானொலி நிகழ்வெண்களின் மின் காந்தக் கதிர்வீச்சை அளக்கவும் கண்டறியவும் பயன்படும் தொலைநோக்கி (-மூ.581). கதிரியம் என்பதை ரேடியட்டர் என்னும் பொருளில் கையாள்கிறோம். கதிர்வீச்சுத்தொலைநோக்கி என்பதையே ஏற்கலாம்.

507. கதிரியநோக்கி  – radioscope :  கதிர்வீச்சினைப் பயன்படுத்திப் பொருளை நோக்க உதவும் கருவி.

508. கதிரியமானி  radiometer     சைகைஇயக்கமானி (ம.515); குறை கதிர்வீச்சளவி, நுண்கதிர்வெப்பஅளவி, ஒலிச் செறிவளவி, கதிர் வீச்சளவி, கதிர்வீசல் அளவி, அலை ஆற்றல் திரிபு விளக்கக்கருவி , கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக்காட்டுங் கருவி , கதிரியக்கச் செறிவுமானி , வெப்பலை வீச்சுச் செறிவு அளக்குங்கருவி, கதிர்வீச்சு மானி, கதிர்வீசல்மானி எனப் பலவகையாகக் குறிப்பிடுகின்றனர். சுருக்கமாகக் கதிரிய மானி எனலாம்.                                                     

509. கதிரியவரைவி – radiograph

510. கதிரை பாய்ம உலவை மானி (க. பா.உ.)  – laser doppler anemometry (LDA)       கதிரை பாய்ம மாற்ற உலவை மானி சுருக்கமாகக் கதிரை பாய்ம உலவை மானி எனலாம்.

511. கதிரை உயரமானி – laser altimeter

512. கதிரை உலவைமானி – laser anemometer

513. கதிரை உறழ்மானி  – laser interferometer

514. கதிரை உறழ்மானி விண்வெளி அலையுணரி  – laser interferometer space antenna (lisa)

515. கதிரை நிலநடுக்கமானி – laser seismometer

516. கதிரை நீட்சிமானி  – laser extensometer

517. கதிரை முகில்மட்டமானி – laser ceilometer

518. கதிரை வலயச் சுழல் நோக்கி – laser ring gyroscope

519. கதிரைத் திசைப்பு மானி (க.தி.மா.) – laser doppler velocimeter (LDC)    வேகமானிக்கும் திசைவேகமானிக்கும் வேறுபாடு காணத் திசைவேகமானியைச் சுருக்கமாகத் திசைப்பு மானி எனலாம். கதிரை பாய்ம மாற்றத் திசைப்பு மானி. சுருக்கமாகக் கதிரைத் திசைப்பு மானி எனலாம்.

520. கதிரைநோக்கி  – laserscope

– இலக்குவனார் திருவள்ளுவன் http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png