கருவிகள் 1600 : 521-560 : இலக்குவனார் திருவள்ளுவன்
521. கப்பற்பயணவரைவி – loxodograph : கப்பல்பயணத்தைப்பதிய உதவும் கருவி.
522. கம்பளித்தரமானி – lanameter : கம்பளியின் தரத்தை அளவிடும் கருவி.
523. கம்பிவலைத் திருத்தி மானி -grid-rectification meter
524. கம்பிவலை நிறமாலைமானி – grid spectrometer
525. கம்பிவலை மின்னோட்ட மானி/ கம்பிவலை அலையியற்றி-grid-dip meter/ grid-dip oscillator : கம்பிவலை மின்னோட்டத்தை அறியக் கம்பிவலையில் ஒருங்கிணைந்த – பன்முகவீச்சு மின்னணுக் குழாய் அலையியற்றிக் – கருவி.
526. கயக்கமானி – taseometer : கட்டமைப்பின் கயக்கத்தை (stress in a structure) அளவிடும் கருவி.
527. கரடுமுரடு மானி-profilometer தரை கரடுமுரடு மானி > கரடுமுரடு மானி
528. கரிமத் தடைய வெப்பமானி-carbon resistance thermometer
529. கரிமமானி-carbometer :எஃகில் உள்ள கரிமத்தை அளவிடும் கருவி.
530. கரிமவளிமானி-anthracometer
531. கரு நோக்கி-foetoscope:கருவுற்ற மகளிரின் வயிற்றின் மேல் வைத்துக் கருவின் இதயத்துடிப்பைக் கேடடு ஆய்வதற்கான கருவி. சிசு இதயமானி என்றுசொல்வதைவிடச் சுருக்கமாகக் கருவின் நெஞ்சத்துடிப்பை நோக்க உதவும் கருவி என்பதால் கரு நோக்கி எனலாம்.
532. கருங்குமிழ் வெப்பமானி-black-bulb thermometer
533. கருத்தலைமானி-labidometer கருக்குழவியின் தலையை அளப்பதற்குரிய கருவி.
534. கருப்புரதமானி- albuminometer/ albuminimeter
535. கருப்பையூடுநோக்கி, கருப்பை உள்நோக்கி-hysteroscope/ uteroscope/ metroscope:கருப்பையின் உள்பகுதியை ஆராய நோக்கும் கருவி.
536. கருவாய் நோக்கி -colposcope :கருப்பையின் வாயிலை நோக்கி ஆராய உதவும் கருவி. அல்குல் ஊடுநோக்கி(-இ.) என்பது தவறாகும். பலர் கருதுவதுபோல் அல்குல் என்பது பிறப்பு உறுப்பல்ல. யோனி நோக்கி என்று சொல்வதும் நன்முறையாக இல்லை. கருவாய் நோக்கி என்றால் நேர்த்தியாக இருக்கும்.
537. கருவிழி நுண்ணோக்கி -corneal microscope :கருவிழியிலும் விழிப்படலத்திலும் உள்ள நுண்ணிய மாற்றங்களை அறிவதற்காக உயர் பெருக்குத்திறன் கொண்ட அளவாடி(lens) உடைய கருவிழி நுண்ணோக்கி .
538. கரைசல் கலங்கல் மானி-paar turbidimeter:கரைசல் கலங்கலை ( solution turbidity)அளவிடுவதற்கு உதவுவது.
539. கல்ம இழையளவி-quartz fibre gauge
540. கல்ம இழை கதிரியக்கமானி-quartz-fiber dosimeter
541. கல்ம இழை மின்னோக்கி-quartz-fiber electroscope
543. கல்ம கிடைமட்ட காந்தமானி-quartz horizontal magnetometer
543. கல்ம மின்னோக்கி-lauritsen electroscope:சார்லசு இலௌரிட்சன், தாமசு இலௌரிட்சன் ஆகியோர் பெயரில் அழைக்கப்படுகிறது. கரடுமுரடானதும் கூருணர்வு உடையதுமான மின்னோக்கி. கல்ம இழை கூருணர்விற்குப் பயன்படுகிறது. கல்ம மின்னோக்கி எனலாம்.
544. கல்ம வெப்பமானி-quartz thermometer
545. கலங்கல்மானி-turbidimeter :நீர்மம் கலங்கியிருப்பதை அளவிடும் கருவி. எனவே, கலங்கல்மானி எனலாம்.
546. கவர்-வட்டு மின் மானி-attracted-disk electrometer
547. கழியளவி-staff gauge:நீ்ர் மட்ட அளவி. எனினும் சொற்பொருத்தம் கருதி, கழி மூலம் அளக்கப்படுவதால் கழிஅளவி எனலாம்
548. களைவளவி-johanson gauge இயோகன்சன் (johanson) என்னும் அறிவியலாளர் பெயரில் அழைக்கப்பெறுகிறது.
549. கற்றைப்பெருக்க உறழ்மானி-lummer-gehrcke interferometer: பல் பெருக்க ஒளிக்கற்றை உறழ்மானி(multiple-beam interferometer). சுருக்கமாகக் கற்றைப்பெருக்க உறழ்மானி எனலாம்.
550. கா/கா மானி.-pH meter:ஊடகத்தின் காரத்தன்மையையோ காடித்தன்மையையோ காட்டுவதே பிஎச்/ pH எனப்படும். இதன் அளவு ஏழுக்குக் கீழிருந்தால் காடித்தன்மை; ஏழுக்கு மேலிருந்தால் காரத்தன்மை. காடி, காரம் ஆகியவற்றைக் குறிக்கும் அலகு என்பதால் கா/கா எனலாம். இதனைக் கண்டறியும் கருவி கா/கா மானி.
551. காசுசெலுத்திப்பொறி-slot machine:துளைவிளிம்பு பொறி : துளைவிளிம்பில் காசுபோடுவதனால் இயங்கும் இயந்திரம். (-ம.568); இயந்திரத்தில் நாணயம் விழுவதற்குரிய வடிவளவுத்துளை, தொடக்கத்தில் விளிம்பில் இருந்தாலும் இப்பொழுது பிற பகுதியிலும் உள்ளது. எனவே, காசுசெலுத்திப்பொறி எனலாம்.
552. காசுசெலுத்திமானி-slot-meter:காசுவீழ்வு அலகுமானி : காசுவீழ்வதனால் அலகு குறித்துக் காட்டும் கருவி. (-ம.568);காசு செலுத்துவதன் மூலம் உரிய அளவினைக் காட்டும் கருவி; ஆதலின் காசுசெலுத்திமானி எனலாம்.
553. காட்சி ஒளிமானி- Bunsen photometer: ஆய்வுத்தட்டின் இருபுறமும் ஏதுவாக அமையும் வகையில் எளிய கண்ணாடி அமைப்பு உள்ள காட்சி ஒளிமானி. இராபர்ட்டு வில்ஃகெம் பன்சென் ( Robert Wilhelm Bunsen :1811-1899) என்னும் செருமானிய வேதியலாளர் பெயரில் பன்சென் ஒளிமானி என அழைக்கப்பெறுகிறது. காட்சி ஒளிமானி எனலாம்.
554. காட்சிப்பரப்புமானி- transmissometer-வளிமண்டிலத்தின் குணக அணைவு(extinction coefficient) -ஐ அளவிடும் , காட்சிப்பரப்பை வரையறுக்கும் ஒளியியக் கருவி. காட்சி நெடுக்கஅளவி(-இ.), காட்சித் தொலைவளவி(-இ.) என்பனவற்றைவிடக் காட்சிப்பரப்புமானி எனச் சொல்வது சீர்மை முறையில் பொருத்தமாக இருக்கும்.
555. காட்பி /காட்சிப்பொறி-projector: எறிகருவி, ஒளி எறிவு படக் காட்டமைவு, படமெறிகருவி, ஒளி எறிவுக் கருவி, எனச்சொல்லப்படுவன, கருவியில் இருந்து ஒளிக்கற்றை வீசப்படுவதை அவ்வாறே எறிவு பொருள் எனக் கொண்டு நேரடியாக மொழிபெயர்த்தனவாக உள்ளன. சினிமாப்படக்காட்சி இயந்திரம் (சினிமா தமிழ்ச் சொல்லல்ல), படம்காட்டும் கருவி, திரைப்படக்கருவி, படம் காட்டும் இயந்திரம , ஒளிப்படக்காட்டி, படங்காட்டி என்று சொல்லப்படுவன பொதுவான பெயர்களாக அமைகின்றன. திரைப்பட வீழ்த்தி, பட வீழ்த்தி என்பனவும் ஏற்றனவாக இல்லை. இக்கருவி மூலம் ஒளிவருவதன் நோக்கம், இருளைப் போக்குவது அல்ல.பட உரு அல்லது எழுத்துருவைப் பெரிதாக்கித் திரையில் அல்லது மதிலில் அல்லது இதுபோன்ற தளத்தில் வீழச்செய்து காட்டுவதுதான். எனவே, பயன் அடிப்படையில் காட்சிப்பொறி எனப் பெயரிடுவதே பொருத்தமாக இருக்கும். காண்பிக்கும் காட்சிப் பொறியைக் காட்பி எனச் சுருக்கமாகக் கூறலாம்
556. காட்பு நுண்ணோக்கி-projection microscope
557. காட்பு வெப்பநிலை வரைவி-projection thermograph
558. காடிமானி-acidimeter/ acidometer : காடிமானி : காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி. சேமக்கலத்திலுள்ள மின்பகுளியின் ஒப்படர்த்தி காணும் நீர்மானி(-மூ8)
559. காணாத் திரண்மை நிறமாலைமானி – missing mass spectrometer
560. காந்த உலவை மானி -magneto anemometer
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply