1. காந்த நிறமாலைமானி-magnetic spectrometer
 2. காந்த வரைவி-maneto-graph : காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி.
 3. காந்த வெப்பமானி- magnetic thermometer

564. காந்தச்செறிவுமானி- coercimeter :    இயற்கைக் காந்தம் அல்லது மின்காந்தத்தின் காந்தச் செறிவை அளவிட உதவும் கருவி.

 1. காந்தத் திசை காட்டி- magnetic compass
 2. காந்தத் திறன்மானி- magnetic potentiometer
 3. காந்தத் தூண்டல் சுழல் நோக்கி- magnetic induction gyroscope
 4. காந்தப் பாயமானி-flux meter

569. காந்தப்பின்னடைவுமானி-hysteresimeter:   காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலையை அளவிடும் கருவி. (காந்தத்தயக்கமானி (-இ.) எனச் சொல்வதைவிட) காந்தப்பின்னடைவுமானி எனலாம்.

 1. காந்தப்புல வலிமை மானி-hall-effect gaussmeter:காந்தப்புலத்தின் வலிமையை, எட்வின் ஆல் என்ற அமெரிக்க இயற்பியலாளரால் (1879 இல்) கண்டுபிடிக்கப்பட்ட விளைவின் அடிப்படையில் அளவிடும் கருவி.

 2. காந்தமானி-magnetometer : காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி. காந்தமானி என்றும் காந்த ஆற்றல்மானி என்றும் குறிப்பிடப்படுகின்றது. சுருக்கமாகக் காந்தமானி என்றே சொல்லலாம்.

 3. காந்தவிசைமானி – permeameter :காந்தவிசைமானி: ஒரு பொருளின் வழியாகச் செல்லும் காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கையையும் காந்தமூட்டும் விசையினையும் அளிவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. (-ம. 476) உட்புகவிடன் மானி, உட்புகுதகவுமானி, புரைவு அளவி,எனவும்(-ஐ.) பொசிமையளவி, பொசிவளவி எனவும் (-இ.) கூறப்படுவனவும் பொருளடிப்படையில் சரிதான். எனினும் ஒரே சொல்லே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், காந்தவிசைமானி எனலாம்.

 4. காந்தவேகமானி- magnetic speedometer
 5. காப்பு வெப்பமானி- protected thermometer
 6. காரமானி-Alkalimeter:காரச்செறிவை அளக்கப் பயன்படும் கருவி.(-மூ.20)
 7. கால்வட்ட மின்மானி-quadrant electrometer
 8. கால இடைவெளி மானி-time-interval meter
 9. கால வெப்பமானி-chrono thermometer:வெப்பநிலை மாற்ற விளைவுகளைக்கணக்கிட்டுச் சராசரி வெப்பநிலையைக் காட்டும் மணிப்பொறி.

 10. காலக்கூறுநோக்கி- chronoscope: மிகச்சிறு காலக்கூறுகளைக் கணிப்பதற்கு நோக்க உதவும் கருவி. காலநுண்ணளவி (-இ.)என்றால் நுண்மை அளவியைக்குறிக்கும். எனவே பொருந்தாது. காலத்துளிமானி (-ஐ-) என்று குறிப்பதைவிட க் காலக்கூறுபாட்டை நோக்கும் கருவியைக் காலக்கூறு நோக்கி என்பதே பொருத்தமாக அமையும்.

        (2.) உந்துவிசை நோக்கி.

 1. காலநிலைமானி-weatherometer

581. காலநோக்கி –chronoscope :             காலத்தின் நுட்பமான பகுதியையும் துல்லியமாக ஆராய்ந்து அறிய நோக்க உதவும் கருவி. காலநோக்கி எனலாம்.

 1. காலமானி-chronometer :திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி(செ.)மின்னணு கடிகாரம், மாலுமி காலமானி, கடிகாரம், காலமாணி, கடிகை, நுட்பக்காலக் கணிப்பளவுக் கருவி. நுண்காலக்கணிப்பான் (-ம.159), திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி(செ.)மின்னணு கடிகாரம், மாலுமி காலமானி, கடிகாரம், காலமாணி, கடிகை எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. எளிமையாகக் காலமானி என்றே சொல்லலாம்.

 2.  காலமுறை மின்கடவுமானி-periodic galvanometer
 3. காற்றடர்நோக்கி-baroscope: காற்றடர்த்தி மாற்றங்களைக் காட்டும் கருவி. அடர்த்தி காட்டி எனக் குறிப்பிடுகின்றனர். அடர்த்தி என்பது பொதுவான சொல்லாக உள்ளமையால் காற்றடர்நோக்கி என்று தெளிவாகச் சொல்லலாம்.
 4.  காற்றரண் கதிரியக்கமானி-farmer dosimeter
 5. காற்றழுத்தமானி- barometer வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி. (-செ.); அழுத்தமானி என்றும் குறிப்பிடுகின்றனர். அழுத்தம் என்பது பொதுவான சொல்லாக உள்ளமையால் வளிமண்டிலத்திலுள்ள காற்றழுத்தத்தைக் காணும் கருவி என்பதைக் குறிப்பிடும் வகையில், காற்றழுத்தமானி என்று தெளிவாகச் சொல்லலாம்.
 6. காற்றளவி-air gauge
 7. காற்றாலை உலவை மானி-windmill anemometer
 8. காற்றியக்க உலவை மானி-eolain anemometer
 9. காற்றியக்கக் கருவிகள்-pneumatic tools:காற்றழுத்தக் கருவிகள் : காற்றழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் கருவிகள். (-ம.491). (காற்றழுத்தக் கருவிகளின் பொதுச் சொல்)
 10. காற்று நோக்கி-anemoscope:காற்றின் போக்க‌ை அல்லது காற்றுத்திசையின் மாற்றத்தை அல்லது வானிலை மாற்றத்தை ஆராய உதவும் கருவி.
 11. காற்று- வெப்பமானி- air-thermometer: இதள் (பாதரதசம்) பயன்படுத்தப்படாமல் காற்று பயன்படுத்தப்படும் வெப்பமானி.

593. காற்றுச்சாய்மானி-anemoclinometer;காற்றுச் சாய்வளவி (-ஐ.),காற்றுத் திசைஅளவி (-இ.) என்பனவற்றைவிடக் காற்றுச்சாய்மானி என்பது சீர்சொல்லாக அமையும்.

 1. காற்றுத்தடை வெப்பமானி -air resistance thermometer
 2. காற்றுத்தூசு நோக்கி-koniscope

596. காற்றுத்தூய்ம மானி-eudiometer : பருமமாற்ற அளவி(பொறி.நு.), வளிம அளவி(இய.),காற்றுத் தூய்மமானி, வாயுமானி எனக் கூறுகின்றனர். காற்றுத் தூய்மையை அளப்பதற்குரிய கருவி என்பதால் காற்றுத்தூய்ம மானி என்றே சொல்லலாம்.

 1. காற்றுமானி- airometer/ airmeter: காற்றுவீச்சின் விகிதத்தை அளவிடுவதற்கான கருவி.(-ம.27); காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி(-செ.).
 2. கிடைக் காந்தமானி- horizontal magnetometer

599. கிடைக்கோணத் தொலைநோக்கி-altazimuth telescope; கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் சுழக்கூடிய தொலை நோக்கி. கிடைக்குத்துக்கோணத் தொலைநோக்கி > கிடைக்கோணத் தொலைநோக்கி

600. கிடைச் செறிவு மாறல்மானி- horizontal intensity variometer

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png

– இலக்குவனார் திருவள்ளுவன்