கருவிகள் 1600 : 601-640 : இலக்குவனார் திருவள்ளுவன்
601. கிண்ண உலவை மானி-cup anemometer
602. கிண்ண மின்மானி-cup electrometer
603. கிண்ணக் காற்றழுத்தமானி-cup barometer
604. கிண்ணச் சங்கிலி உலவை மானி-bridled-cup anemometer
605. கிண்ணி வெப்பமானி-cup-case thermometer
606. கிணறுவகை நீர்ம-வளிய அழுத்தமானி-well-type manometer
607. கீற்றணி நிறமாலைமானி-grating spectrometer
608. கீற்றொளி உயிரி நுண்ணோக்கி-slit lamp biomicroscope
609. கீற்றொளி நுண்ணோக்கி-slit lamp microscope :கருவிழிப்படலப் பின்பரப்பை ஆய்வதற்குரிய இணைப்புடைய நுண்ணோக்கி.
610. குண்டு நீரடர்மானி-balling hydrometer
611. குண்டு மிதவை நீர்ம மட்டமானி-ball-float liquid-level meter
612. குத்துநிலை உலவை மானி-vertical anemometer
613. குத்துயரமானி-hypsometer / hypometer இட உயரமானி; மேட்டுப்பகுதிகளின் உயரமளிக்கும் கருவி. காற்றழுத்தமானி ( மூ 321); காற்றழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி. நீர்மத்தின் கொதிநிலையை உறுதி செய்வதன் மூலம் உயரங்களை மதிப்பிடலாம். நீராவி வெப்ப நிலையில் வெப்பநிலைமானிகளில் அளவீடுகள் குறிக்கவும் பயன்படும்.
- கொதிநிலைமானி
- இடஉயரஅளவி
- கொதிநிலை அளவி
- மரஉயர அளவி
- இட உயரமானி
எனப் பலவகையாகக் குறிப்பிடுகின்றனர்.
கொதிநிலை அல்லது காற்றழுத்தம் மூலம் அறிவது உயரத்தைத்தான். எனவே, பொதுவாகக் குத்துயரமானி எனலாம்.
614. குப்பி வெப்பமானி-bottle thermometer
615. குரல்வளை நோக்கி- laryngoscope : குரல்வளையை நோக்கி ஆராயும் கருவி.மிடற்றூடு நோக்கி என்றும் சொல்லப்படுகின்றது. குரல்வளை அகநோக்கி என்பதன் சுருக்கமாகக் குரல்வளை நோக்கி எனலாம்.
616. குரலொலி மானி-phthongometer :குரலொலிகளை அளவிடும் கருவி.
617. குருணைமானி- bailey meter: குழாய் அல்லது நீர்த்தாரை மூலம் வெளியேறும் குருணைப் பொருளின்(granular material) மொத்த எடையைப் பதியும் பாய்மமானி. குருணைமானி எனலாம். (பெய்லி ஓட்டவளவி(.இ.) என்பது சீர்மைச் சொல்லாக அமையாது.)
618. குருதி நிறமி மானி- haemoglobinometer
619. குருதிக்குழல் நோக்கி-angioscope
620. குவிமுகில் நோக்கி-stratoscope:தரையிலிருந்து தொலைவியக்கம் மூலம் கையாளப்படும், குவிமுகில் மண்டிலத்திலுள்ள காலூதி (balloon)யில் இயங்கும் தொலை நோக்கி. குவி முகில் மண்டிலத்தில் இயங்குவதால் குவிமுகில் நோக்கி எனலாம்.
621. குவியமானி- focimeter / focometer lensmeter or lensometer :ஒளி அளவாடியின் குவியத் தொலைவை அளவிடும் கருவி. குவிய நீளஅளவி ( -இ) என்பதைவிடக் குவியமானி ( -ஐ) என்பதே சரியாகும்.
622. குழல் மின்வலி மானி -tube voltmeter
623. குழாய் வளைவு நீரோட்டமானி – pipe elbow meter
624. குழைமமானி-plastometer
625. குளிர்-குழாய் தழல்மானி – cooled-tube pyrometer
626. குளிர்விப்புத்திறன் உலவை மானி – cooling-power anemometer
627. குளிர்விப்புமானி – coolometer : காற்றின் குளிர்விப்புத்திறனை அளவிடும் கருவி.
628. குறிகாட்டி வெப்பமானி – index thermometer
629. குறிகை வலிமைமானி – signal-strength meter
630. குறிப்பி – indicator ;
- காட்டடி,
- காட்டி, காட்டொளி,
- குறிகாட்டி,
- குறிப்பான் ,
- குறியீடு,
- சுட்டி,
- சுட்டிக் காட்டுக் கருவி;
- சுட்டிக் காட்டும் கருவி,
- சுட்டிக்காட்டி,
- சுட்டுகைக்கருவி,
- சுட்டுணர்வி ,
- செயல்வினை காட்டி,
- நிலைகாட்டி,
- புலப்படுத்தி
- மானி,
எனப் பலவகையாகக் குறிப்பிடுகின்றனர். மானி என்பது இதற்குப் பொருந்தாது. சுட்டி , காட்டி ஆகியன வேறு வகையாகப் பயன்படுத்தப்படுவதால், இங்கே தவிர்க்க வேண்டும். குறிப்பான் பொதுவாக இரண்டு இடத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதனையே ஏற்றுச் சுருக்கமாகக் குறிப்பி எனலாம்.
631. குறிப்பிஅளவி – indicator gauge/indicated gauge
632. குறிப்பேற்றமானி – modulation meter
633. குறிமுள் சுற்றுமானி – pointer tachometer
634. குறியீட்டளவி- marking gauge / scratch gauge
635. குறு நீள்மைமானி – huggenberger tensometer : 1200 மடங்கு உருப் பெருக்கிக் காட்டும் கலவை நெம்புகோல் முறையில் பயன்படுத்தப்படும் ஒருவகை நீட்சிமானி. குறு நீள்மைமானி எனலாம்.
636. குறு மின்வலிமானி – millivoltmeter
637. குறுக்கீட்டு உறழ்மானி – michelson interferometer
638. குறுக்கீட்டு நுண்ணோக்கி – interference microscope
639. குறுக்கு வெப்பமானி – transverse thermometer
640. குறுக்குக் குறிமுள்மானி – crossed-needle meter
Leave a Reply