641.குறுக்குமானி – stenometer:   ஈர் இலக்குகளின் குறுக்கே உள்ள தொலைவை அளக்கும் கருவி. தொலைவுமானி வேறு உள்ளதால், இதனைக் குறுக்குமானி எனலாம்.

  1. குறுக்கொலிமானி – psophometer : மின்சுற்றுகளில் குறுக்கிடும் ஒலிகளை அளவிடும் கருவி.

மின் இரைச்சலளவி (.இ.) எனக் குறிப்பதைவிடக், குறுக்கொலிமானி எனலாம்.

  1. குறுகிய அலைப்பட்டை தழல்மானி – narrow-band pyrometer
  2. குறை கடத்தி திரிபளவி – semiconductor strain gauge
  3. குறைஒளி ஒளிமானி – grease spot photometer
  4. துளைநோக்கி – borescope / boroscope : குறைபாடுகள் அல்லது செம்மையின்மையை அறிய   இறுக்கமான இடங்களையும் குறுகிய துளைகளையும் ஆய்வதற்குரிய பார்வைக்கருவி.

647. கூட்டி – adder:   இலக்கங்களின் கூட்டுத் தொகையைப் பதிவு செய்யும் கருவி. எனவே கூட்டல் பொறி என்கின்றனர். அரசுத்துறைகளில் கூட்டி எனச் சுருக்கமாகக் கூறுகின்றனர்.(-இ)

648. கூட்டு நுண்ணோக்கி – compound microscope : ஈர் அளவாடிகள் இணைந்த நுண்ணோக்கி

649. கூம்பு அளவி – cone gauge / taper gauge                  

650. கூம்புநோக்கி – conoscope : படிகத்தள ஒளியியல் ஆய்வி, அச்சுக்கோண அளவி என இருபெயர்களில் அழைக்கின்றனர்.சுருக்கமாகக் கூம்புநோக்கி எனலாம்.

651. கூரிய மின்கடவுமானி- d’ arsonval galvanometer :  தர்சன்வால்(d’Arsonval :1851-1940) என்னும் பிரெஞ்சு இயற்பியலாளர் பெயரில தர்சன்வால் மின்கடவுமானி என்று அழைக்கப் பெறுகிறது.. நுண்ணிய மாழைக் கம்பிகள் அல்லது இழைகள் இடையே காந்தப்பு லத்தை நீக்கிய நகரும் கம்பிகள் உடைய கூரிய மின்கடவுமானி. எனவே, கூரிய மின்கடவுமானி எனலாம்

652. கூறுபாட்டு நுண்ணோக்கி- dissecting microscope

653. கேட்பு நிகழ்வெண் மானி- audio-frequency meter

654. கேட்பு நிறமாலைமானி – audio spectrometer

655. கேட்புமானி   sonometer   / audiometer : செவிகளின் ஒலி உணர்வுகளை அளக்கும் கருவி. சுரமானி, ஒலி நிகழ்வெண் அளவி, ஒலியளவி,ஒலிமானி எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். சுரமானி என்னும் பொழுது ஒலிச்சுரம் பற்றி இல்லாமல் காய்ச்சல் சுரத்தை அல்லது வெப்பத்தைக்குறிப்பதாகக் கருதுவர். எனவே, இதனைத் தவிர்க்கலாம். ஒலி அலைவெண் அளவி, ஒலியளவி, என்பன சோனோகிராஃப்பு(sonograph) என்பதைக் குறிப்பதாக அமையும். ஒலிமானி என்பது போனோமீட்டர் / phonometer -ஐக்குறிக்கும். செவிப்புல ஒலி உணர்வுமானி(-செ.)   என்பது தொடராக உள்ளது. செவிப்புல ஒலி என்பது கேட்டல்தான்.எனவே,கேட்புமானி என்றே குறிக்கலாம்.

656. கேளாஒலி அளவி – ultrasonoscope

657. கேளாஒலி நுண்ணோக்கி – ultrasonic microscope

658. கை விசைமானி – hand dynamometer

659. கைப்புலச் சுடரொளிநோக்கி –   pocket field luminoscope

660. கொண்ம உயரமானி – capacitance altimeter

661. கொண்ம மின்மானி – capacitive electrometer

662. கொண்மமானி   – capacitance meter

663. கொண்மி மின்னேற்ற உலவை மானி  – condenser-discharge anemometer: சராசரிக் காற்று வேகத்தைச் சுட்டிக்காட்டக்கூடிய மின்சுற்றில் இணைக்கப்பட்ட உலவைமானி. கொண்மி வெளியீடு காற்றுவேக அளவி (-இ.) எனக் கூறுவதைவிடச் சொற்சீர்மைகருதி, கொண்மி மின்னேற்ற உலவைமானி எனலாம்.

 664. கொதிநிலை மானி –   ebulliometer; hypsomete/hypometer என்பது குத்துயரமானியையும் குறிக்கும்; கொதிநிலைமானியையும் குறிக்கும். எனினும் நாம் தமிழில் கொதிநிலை மானி – ebulliometer; குத்துயரமானி- hypsometer எனத் தனித்தனியாகவே பயன்படுத்தலாம்.

665. கொதிநிலைநோக்கி – ebullioscope :  நீர்மங்களின் கொதிநிலையை நோக்கி அளக்க உதவும் கருவி.

666. கொளுக்கியளவி- hook gauge

667. கோடல்மானி- bias meter

668. கோண அளவி- angle gauge

669. கோண ஒளிமானி – goniophotometer

670. கோண முடுக்க மானி  – angular accelerometer

671. கோணத்தண்டு வெப்பமானி  –  angle-stem thermometer

672. கோணப்பதிவி   – recipiangle : கோணங்களை அளவிடுவதற்குரிய பழைய கருவி.

673. கோணப்பெயர்வு சுழல் நோக்கி – displacement gyroscope

674. கோணமானி – (படிகக் கோணமானி – இயற்பியல்; வானலைக்கோணமானி -மின்னியல்)   goniometer  படிக முகங்களுக்கிடையே உள்ள கோணங்களை அளக்கும் கருவி(-மூ.282) உள்வாங்கும் வானொலி அலைகளை அறிய உதவும் கருவியும் கோணமானி என்றே சொல்லப்படுகிறது. வேறுபடுத்த வேண்டுமானால் இயற்பியலில் படிகக் கோணமானி என்றும் மின்னியலில் வானலைக் கோணமானி என்றும் சொல்லலாம்.

675. கோபுரத் தொலைநோக்கி –  tower telescope: சூரியனை நோக்கி ஆராய்வதற்காகக் கோபுரத்தின் உள்ளே தொலைநோக்கிக் குழல் இருக்கும் வகையில் அமைக்கப்படும் அகன்ற ஒளிவிலகல் நீளம் உடைய தொலைநோக்கி.

676. கோலளவி –  rod gauge

677.  கோள எல்லொளிமானி /கதிர்வீச்சுத் தொகுமானி – bellani spherical pyranometer/ radiation integrator

678. கோளக வெம்மிமானி –  bomb calorimeter

679. ங – கதிர் தொலைநோக்கி –  X-ray telescope

680. ங – கதிர் நுண்ணோக்கி – X-ray microscope : ஊடு கதிராகிய ங – கதிர் பயன்படுத்தப்படும் நுண்ணோக்கி.

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png

 

 

– இலக்குவனார் திருவள்ளுவன்