கருவிகள் 1600 : 801-840 : இலக்குவனார் திருவள்ளுவன்
801. | தரக்கம்பி அளவி / த.க.அ. | standard wire gauge / s. w. g | |
802. | தரவுநோக்கி | data scope | மின்னணுக்காட்சியில் தரவுகளை வெளிப்படுத்துவது. |
803. | தலைகீழ் நுண்ணோக்கி | inverted microscope | |
804. | முன்பார்வை வெப்பமானி | reversing thermometer | வெப்பமானியில் பின்னர் பார்க்கும் வகையில் பதிவாகக் கூடியது. தலைகீழ் வெப்பநிலைஅளவி (-இ,) என்று குறிப்பதைவிட, முந்தைய பதிவைப் பார்க்க இயலக்கூடியது என்ற முறையில் முன்பார்வை வெப்பமானி எனலாம். |
805. | ஆழ்கடல் முன்பார்வை வெப்பமானி | deep sea reversing thermometer | நீரில் குறிப்பாக ஆழ்கடலில் பயன்படுத்தக்கூடிய முன்பார்வை வெப்பமானி. இதனை எனலாம். |
806. | தழல்மானி | pyrometer | உயர்வெப்பமானி : உயர் வெப்பங்களைத் தொலைவிலிருநது அளப்பதற்குரிய கருவி. (-மண.508)
செந்தழல்மானி : கதிர்வீச்சு விதிகளைப் பயன்படுத்தித் தொலைவிலிருந்து மீவெப்ப நிலைகளைப் பதிவு செய்யும் கருவி. (- மூ.571) சுருக்கமாகத் தழல்மானி எனலாம். |
807. | தளச்சாய்வுமானி | clinometer | சாய்வு அளக்கும் கருவி |
808. | தளமட்டவரைவி | planigraph | |
809. | தளமானி | platometer / planimeter | தளம் அல்லது பரப்பை அளவிடுவதற்குரிய கருவி. |
810. | தன்னியல் நேர்நிரல் நிறமாலைமானி | auto-collimating spectrometer | |
811. | தனியளவி | absolute gauge | |
812. | தனி உயரமானி | absolute altimeter | |
813. | தனி மின்
கடவுமானி |
absolute galvanometer | |
814. | தனி வளியழுத்தமானி | absolute manometer | |
815. | தனிக் காந்தமானி | absolute magnetometer | |
816. | தாங்கு ஏலா அளவி | no-go-gauge | |
817. | தாவர வரைவி | crescograph | தாவர வளர்ச்சியை மதிப்பிடும் வரைவி |
818. | தாவரமானி | phytometer | |
819. | தாழ்திறன் நுண்ணோக்கி | low power microscope | |
820. | தாழ்வெப்ப வெம்மிமானி | Nernst-lindemann calorimeter
|
அறிவியலாளர் நேர்னெசுட்டு – இலிந்தெமென் பெயரில் அழைக்கப்பெறுகிறது. குறித்த வெப்பநிலையைத் தாழ்ந்த வெப்பநிலையில் அளவிடுவது. எனவே, தாழ்வெப்ப வெம்மிமானி எனலாம். |
821. | தாழ்வெப்பச் சுழல் நோக்கி | cryogenic gyroscope | |
822. | தாழழுத்த அளவி | low pressure gauge | |
823. | தாள் திரி ஆவிமானி | piche evaporimeter | நுண்துளைத்தாள் திரி ஆவிமானி. |
824. | தாளிரும்பளவி | horseshoe gauge | |
825. | தானியங்கிக் கேட்புமானி | bekesy audiometer / bakesy audiometer | |
826. | தானெண்ணி
மானி |
autometer | ஒளிநிகரியில் எடுக்கப்படும் படிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கூறுவதற்கான கருவி. தானெண்ணிமானி. இப்பொழுது மிதியூர்தியில் (ஆட்டோவில்) இணைக்கப்பட்டுள்ள தொலைவைக் கணக்கிட்டுக் கட்டணத்தை வரையறுத்து அச்சிட்டுத் தரும் கட்டணமானியையும் ஆட்டோமீட்டர் /autometer என்கின்றனர். |
827. | திசை காட்டி / கவராயம் | compass | |
828. | திசைஒருமியக் கதிரி | isotropic radiator | |
829. | திசைகாட்டிச் சரிவுமானி | compass declinometer | |
830. | திசைப்பு -வகை பாய்மமானி | velocity-type flowmeter | |
831. | திசைப்புமானி | velocimeter | திசைவேக அளவி என்றும் திசைவேகமானி என்றும் சொல்லப்படுகின்றது. திசைப்பு மானி எனலாம்.
|
832. | திசையறிஒலிப்பி | topophone | பனிமூட்டம் போன்ற சூழல்களில் கடற்கலங்களை எச்சரிப்பதற்காக ஊதப்படும் ஒலிக்கொம்பின்(fog-horn) திசையையும் இடத்தையும் அறிவதற்குக் கப்பலோட்டிகள் பயன்படுத்தும் கருவி . திசையறிஒலிப்பி எனலாம். |
833. | திசைவில் பட்டடை | azimuth compass
|
அசிமத்(Azimuth) என்பதைப் பெயர்ச் சொல் எனக் கருதி 35
அசிமத் பட்டடை என்றே கூறுகின்ற்னர். அசிமத் என்பது அரபிச் சொல்லின் அடிப்படையில் பிறந்த கலைச்சொல்லாகும். திசைவில் என்பது இதன் பொருளாகும். திசைவில் (Azimuth) என்பது ஒரு பார்வையாளரின் வட தொடுவானத்திலிருந்து ஒரு வான்பொருளின் திசையினைக் குறிக்கும் வலஞ்சுழியாக அளவிடப்படும் பாகையாகும் என விக்கிபீடியா <http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D> விளக்குகிறது. எனவே, திசைவில் பட்டடை என்பதே சரியாகும். |
834. | திண்ம நீரடர்மானி | Nicholson hydrometer | நீரிலும் காற்றிலும் எடையிடுவதன்மூலம் திண்மங்களின் ஒப்படர்த்தியைக் காண உதவும் நீர்மமானி |
835. | திண்மமானி | pyknometer | அடர்த்திமானி(-இ.) என்னும் பொழுது தவறான பொருள்(densimeter) வரும். எனவே திண்மமானி எனலாம்.
Pykmometer – அடர்த்திமானி; நீர்மத்தின் பெருகெண்ணையும் அடர்த்தியையும் கண்டறியும் கருவி(.மூ.570) என்பது இதைத்தான் குறிக்கின்றது. அச்சுப்பிழையா எனத் தெரியவில்லை. |
836. | திரண்மை நிறவரைவி | mass-spectrograph | திரிபடிவ வகைபிரி கருவி: மின்காந்தக்களங்கள் ஊடாக அணுவிசை இயக்குவதன் மூலம் தனிம மறுபடிவங்களைப் பிரிப்பதற்குரிய கருவியமைவு(-செ.).
பொருண்மை நிறவரைவி : தனியணுக்களின் பொருண்மை அறியும் கருவி (- மூ.) திணிவு நிறமாலைபதிகருவி, திணிவுநிறமாலை, நிறை நிரல் வரைவி, நிறைமாலை வரைவி, பொருண்மை அலை மாலை வரைவி, பொருண்மை நிரல் வரைவி, பொருண்மை நிறமாலை வரை, பொருண்மை நிறமாலை வரைவி எனப் பலச்சொற்களை ஐரோப்பிய அகராதி குறிப்பிடுகிறது. பொருண்மை என நேரடியாகக் கூறுவதைவிடத் திரள்வதைத் திரண்மை என்பது பொருத்தமாக இருக்கும். திரண்மை நிறவரைவி எனலாம். |
837. | திரண்மை நிறமாலை நோக்கி | mass spectroscope | திரிபடிவ வகைபிரி கருவி: மின்காந்தக்களங்கள் ஊடாக அணுவிசை இயக்குவதன் மூலம் தனிம மறுபடிவங்களைப் பிரிப்பதற்குரிய கருவியமைவு(-செ.).
பொருண்மை நிறவரைவி : தனியணுக்களின் பொருண்மை அறியும் கருவி (- மூ.) திணிவு நிறமாலைபதிகருவி, திணிவுநிறமாலை, நிறை நிரல் வரைவி, நிறைமாலை வரைவி, பொருண்மை அலை மாலை வரைவி, பொருண்மை நிரல் வரைவி, பொருண்மை நிறமாலை வரை, பொருண்மை நிறமாலை வரைவி எனப் பலச்சொற்களை ஐரோப்பிய அகராதி குறிப்பிடுகிறது. இந்த இடத்தில் பொருண்மை என்பதைவிடத் திரண்மை என்பதே சரியாகும். எனவே, திரண்மை நிறமாலை நோக்கி எனலாம். |
838. | திரண்மை நிறமாலைமானி | mass spectrometer | |
839. | திரண்மைப் பாய்மமானி | mass flowmeter | |
840. | திரவப் பாகுமைமானி | saybolt viscometer |
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply