81. ஆரையளவி – fillet gauge / radius gauge

82. ஆவன்னா – இகர அளக்கைமானி – beta-gamma survey meter : அளவை மானி என்றால் அளவிடும் கருவி( guage) எனத் தவறாக எண்ணலாம். எனவே, அளக்கை மானி எனலாம்.

83. ஆவன்னாக் கதிர் எதிர்ச்சிதறல் தடிம அளவி – beta-ray backscatter thickness gauge          : அகரக்கதிருக்கு அடுத்ததை ஆகாரக்கதிர் எனக் குறிக்கும் பொழுது உணவு எனத் தவறாக எண்ணலாம். எனவே, இங்கே ஆவன்னாக்கதிர் எனக் குறிக்கப்பெறுகிறது.

84. ஆவி அழுத்த நோக்கி – isoteniscope

85. ஆவியழுத்தமானி – vaporimeter : ஆவி அழுத்தத்தை அளவிடும் கருவி

86. ஆவி உறிஞ்சன்மானி – evapotranspirometer

87. ஆவி நிரப்பு வெப்பமானி -vapor-filled thermometer

88. ஆவியழுத்த ஊடுபரவுமானி – vapor-pressure osmometer

89. ஆவிமானி –   atmometer / atmidometer/ evaporimeter/ siccimeter :     வளி மண்டிலத்தில் நீர் ஆவியாகி இழப்படைவதை அளப்பது.

90. ஆவியழுத்த வெப்பமானி – vapour pressure thermometer

91. ஆவிவரைவி – evaporograph : அலைவிரிவியக்கமுடைய நெய்யாவிமீது நிழற்படிவம் படியவிடுவதன் மூலம் உருவெளி நிழலுருப்படுத்திக் காட்டும் கருவி.

92. ஆழ்கடல் நோக்கி/ ஆழ்கடல்கோளம் – bathyscope/ bathysphere : கடலின்அடியில் உள்ளவற்றை நோக்க உதவும் கருவி.

93. ஆழ்கடல் வெப்பமானி – deep sea thermometer

94. ஆழ்நீர் வெப்ப வரைவி – bathythermograph : ஆழ்நீர் வெப்ப அளவைப் பதிவது

95. ஆழ அளவி – depth gauge

96. ஆழ நுண்மானி – depth micrometer

97. ஆழ நோக்கி – benthiscope

98. ஆழியளவி – wheel gauge

99. ஆழித்தடைமானி – peirameter : ஊர்திகள் செல்லும் வழித்தடத்தில் சக்கரங்களுக்கு சாலைப்பரப்புகளில் ஏற்படும் தடையினை அளவிடும் கருவி. சக்கர இயக்கத்தின் அடிப்படையில் தடத்தடையை அளவிடும் இக்கருவியை தடத்தடைமானி என்றும் ஆழித்தடைமானி என்றும் கூறலாம்.

100. ஆழுயிரி நோக்கி – benthoscope : ஆழ்கடலில் மூழ்கி அங்குள்ள உயிரினவாழ்க்கை பற்றி ஆராய்வதற்கு உதவுவது. ஆழுயிரி நோக்கி எனலாம்.

101. ஆற்றல்மாற்ற வெப்பமானி – deformation thermometer : ஆற்றல்மாற்றக்கூறுகளை உடைய வெப்பமானி.     உருக்குலைவு வெப்பநிலைஅளவி (-இ.) என்றால் உருக்குலைவு (anamorphoscope) உடன் தொடர்புடையதாகத் தவறாகக் கருதலாம். எனவே, ஆற்றல்மாற்ற வெப்பமானி எனலாம்.

102. ஆற்றல்மானி – energymeter

103. இக நுண்சலாகை திரண்மை நிறமாலைமானி –   ion microprobe mass spectrometer: இகம் ion (விளக்கத்திற்கு ‘இகத்தல் அலைமாலைமானி’ காண்க.

104. இக நுண்ணோக்கி   ion microscope :இகம் ion (விளக்கத்திற்கு ‘இகத்தல் அலைமாலைமானி’ காண்க.

105. இகத்தல் அலைமாலைமானி – ionization spectrometer  : அணு அல்லது அணுக்கள் குழு, ஒன்று அல்லது மேற்பட்ட மின்னணுக்களைப் பெறுவதாலோ இழப்பதாலோ அடையும் நிகர மின்னூட்டமே ‘அயன்’ எனப்படுகிறது. அயனின் மூலக்கிரேக்கச் சொல்லிற்கு(ienai)ப் போதல் என்றுதான் பொருள். ‘போ’ என்னும் வினையின் அடிப்படையான சொல்லையே போதலுக்கும் வருதலுக்கும் பயன்படுத்திச் சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளது. ‘இகத்தல்’ என்றால் நீங்குதல்; கைப்பற்றுதல் ; பிரிதல் ; போதல்; நீங்குதல் ; நெருங்குதல்; எனப் பல பொருள்கள் உண்டு. ‘இகத்தல்’ நீங்கிப் போவதையும் குறிக்கிறது; நெருங்கி வருவதையும் பற்றுதலைக் குறிப்பதன் மூலம் ஏற்பதையும் குறிக்கிறது. எனவே, இச்சொல்லின் அடிப்படையில் ‘இகம்’ என நாம் பயன்படுத்தினால் ஏற்பையும் இழப்பையும் குறிக்கும் கலைச் சொல்லாக அமையும். இதன் அடிப்படையில், இவ்வுருவாக்கத்தின் நிகழ்முறையான அயனிசேசன்/ ionization என்பதை ‘இகத்தல்’ என்றே சொல்லலாம். இலக்கியத்தில் வெவ்வேறு பொருள்கள் இருப்பினும் அறிவியல் முறையில் இகம், இகத்தல் என்பனவற்றை நாம் கலைச்சொற்களாகக் கருதிப் பயன்படுத்தலாம். 

106.  இகத்தல் அளவி – ionisation gauge

107.  இகரக் கதிர்த் தடிம அளவி – gamma ray thickness gauge

108.  இகரக்கதிர் உயரமானி – gamma-ray altimeter

109.  இசைவித்த கோல்நிகழ்வெண்மானி – tuned-reed frequency meter

110.  இடப்பெயர்ச்சி வளியழுத்தமானி – displacement manometer

111.  இடப்பெயர்ச்சிமானி – displacement meter

112.  இடப்பெயர்ப்பி வகை மானி – displacer-type meter

113.  இடிவீழ் வரைவி/ இடி, மின்னல் வரைவி – ceraunograph / keraunograph :     இடி மின்னல் வீழ்வதையும் அவற்றால் ஏற்படும் பாதிப்பையும் வரையஉதவும் கருவி. 

114.  இடுப்பெலும்புக் கோணமானி – cliseometer :     உடலின் அச்சுக்கும் இடுப்பு எலும்புக்கும் இடையிலான கோணங்களை அளவிடுவதற்கான ஒரு சாதனம் (மரு. 307). ஒலிபெயர்ப்பில் கிளிசுயோமீட்டர் எனக் குறிப்பிடுகின்றனர். இதனை, இடுப்பெலும்புக் கோணமானி என்று தமிழில் குறிப்பிடலாம். 

115.  இடுப்பெலும்புமானி – pelvimeter : இடுப்புக்கூட்டுமானி, இடுப்பெலும்புமானி, இடுப்பெலும்பு அளவி எனச் சொல்லப்படுவனவற்றுள் இடுப்பெலுமபுமானி என்பதே சரியாகும். 

116.  இடைப்படலப் பாய்மமானி – diaphragm meter : உதரவிதானம் எனப்படும் இடைத்திரைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.இடைத்திரை என்றால் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்பதால் இடைப்படலம் எனக் குறிக்கப் பெறுகிறது. இது பாய்மமானி வகையைச்சேர்ந்தது.எனவே அதுவும் தெளிவு கருதிச் சேர்க்கப் பட்டுள்ளது.

117.  இடைபிரிதிற உருவரைவு கதிர்நிரல்மானி (இ.உ.க.நி.மா.) – medium-resolution imaging spectrometer (meris)

118.  இடைமறி நேர்மின் சுற்றுமானி – interrupted dc tachometer

119.  இடைமானி – pitchometer:கப்பலின் உந்துத்தகடுகளின் (propeller blades) இடைவெளிக் கோணங்களை அளக்க உதவும் கருவி. இடைவெளிமானி என்பதன் சுருக்கமாக இடைமானி எனலாம். 

120.  இடையிட்டுக் கதிரி : slot radiator

(பெருகும்)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png– இலக்குவனார் திருவள்ளுவன்