881. தூய்மி நிறமாலை ஒளிமானி dobson spectrophotometer

 

வளிமண்டிலத் தூய்மியை அளவிடுவதற்குரிய தொடக்கக்காலக் கருவியாகும்; கோர்டன் தாபுசன் என்னும் அறிவியலாளரால் 1924 இல் கண்டுபிடிக்கப்பட்டது. தாபுசன் நிறமாலைஒளிமானி/ தாபுசன் நிறமாலைமானி/தாபுசன்மானி/ என்றும் அழைப்பர்.
882. தூள் பாய்மமானி powder flowmeter  
883. தெரிவுக் கதிரி selective radiator  
884. தெவிட்டு உள்ளகக் காந்தமானி saturable-core magnetometer  
885. தேக்க அலைவுநோக்கி storage oscilloscope  
886. தேய்கிளர்   அளவி limen gauge  
887. தேனிரும்பு மின்னோடிமானி soft-iron ammeter  
888. தொகு கோள ஒளிமானி integrating-sphere photometer  
889. தொகு சுழல் நோக்கி integrating gyroscope  
890.  தொகு நிகழ்வெண் மானி integrating frequency meter  
891. தொகு மின்கடவுமானி integrating galvanometer  
892. தொகு முடுக்கமானி integrating accelerometer  
893. தொகுமானி integrating meter  
894. தொகையீட்டு ஒளிமானி integrating photometer  
895.  தொங்கல் ஈரப்பத வெப்பமானி sling psychrometer  
896. தொங்கல் பாகுமைமானி rankines viscometer/ Ubbelohde viscometer  
897. தொங்கல் வெப்பமானி sling thermometer  
898.  தொங்குசுருள் மின்கடவுமானி suspended coil galvanometer  
899.  தொங்குவட்டு மானி nutating-diskmeter  
900. தொட்டி சூழிட நோக்கி tank periscope  
901. தொட்டி காற்றழுத்தமானி cistern barometer  
902. தொடர்ச்சி அளவி continuous gauge  
903. தொடுஉணர்வு மானி esthesiometer or aesthesiometer / tactometer தொடுஉணர்வின் கூர்மையை அளவிடும் கருவி
904. தொடுகைமானி haptometer தொடுஉணர்ச்சியை அளவிடும் தொடு உணர்மானி.
905. தொடுவகை உலவை மானி  contact anemometer  
906. தொடுவரை மின்கடவுமானி

 

tangent galvanometer

 

ஆரைமுள் மின்கடவுமானி

சிறிய மின்னோட்டங்களை அளக்கப் பயன்படும் கருவி(-மூ.691.)

மையத்தில் செங்குத்தான கம்பிச்சுருளில் கிடைமட்ட சிறு காந்த ஊசியுடைய கருவி. கம்பிச்சுருளின் ஊடாகச் செல்லும் மின்சாரமே அளவிடப்படும்.

கிளெடு பௌலெட்டு       (Claude Pouillet   ) என்னும் பிரெஞ்சு அறிவியலாளரால்முதலில் விளக்கப்பட்டது.

தொடுவரை மின்கடவுமானி எனலாம்.

907. தொடுவெப்பவரைவு contact thermograph  
908. தொலை ஒருங்குமானி telepsychrometer  
909. தொலை ஒளிமானி telephotometer  
910. தொலை ஒளிவரைவு photo-telegraph தந்திப்பட அனுப்பீட்டமைவு
911. தொலை நுண்ணோக்கி telemicroscope  
912. தொலை புயல் வரைவி kerramograph தொலைமின் புயல்களைப் பதிவு செய்வதற்குரிய கருவி.
913.  தொலைஅளவீட்டு அலையுணரி telemetering antenna  
914.  தொலைஅளவீட்டு அலைவாங்கி telemetering receiver  
915. தொலைநிறமாலை நோக்கி telespectroscope தொலைநோக்கியும் நிறமாலைநோக்கியும் இணைந்த கருவி.
916. தொலைநோக்கி telescope  
917. தொலைபொருள்மானி macrometer தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி.
918. தொலைமானி telemeter  
919. தொலைவாசிப்புத்திசை

காட்டி

quadrantal deviation of compass  
920. தொலைவானிலை வரைவி

 

telemeteorograph  

– இலக்குவனார் திருவள்ளுவன்

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png