கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்
961. | நிலைத்தடை நேர்மின் திறன்மானி | constant-resistance dc potentiometer | |
962. | நிலைநீர்மப் பாகுமைமானி | stokes viscometer | செங்குத்துக் கண்ணாடிக்குழாயில் நீர்மம் நிலையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கேபிரியேல் இசுடோக்கு ( Sir George Gabriel Stoke :13.08.1819 – 01.02.1903) என்னும் அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கணக்கியல் இயற்பியலாளர் பெயரில் வழங்கப்படுகிறது. நிலைநீர்மப் பாகுமைமானி எனலாம். |
963. | நிலைநீரியல்அளவி | hydrostatic gauge | |
964. | நிலைப்பிலா ஈர்ப்புமானி | astatized gravimeter | |
965. | நிலைமின் சுழல் நோக்கி | electrostatic gyroscope | |
966. | நிலைமின் திறனமானி | electrostatic wattmeter | |
967. | நிலைமின் மின்வலி மானி | electrostatic voltmeter | |
968. | நிலையக நோக்கி | statoscope | |
969. | நிலையிலி ஈர்ப்புமானி | astatic gravimeter | |
970. | நிலையிலி காந்தமானி | astatic magnetometer | |
971. | நிலையிலி திறனமானி
|
astatic wattmeter | காந்தப் பாதிப்பிலாதது |
972. | நிலையிலி மின்கடவுமானி | astatic galvanometer | |
973. | நிழல் ஒளிமானி | shadow photometer | |
974. | நிற ஒளிமானி | colour photometer | |
975. | நிற ஒளிநோக்கி | chromascope | |
976. | நிற கலப்புக்கருவி | chromatoscope | |
977. | நிற நோக்கி | chromoscope | வேறுவேறு நிற வடிவங்களை இணைத்து நோக்குவதற்குரிய கருவி.
பொறியியல் தொழில் நுட்பத்துறையில் நிறச்செறிவு பகுப்பாய்வி என்றும் இயற்பியலில் நிறங்காட்டி என்றும் குறிக்கின்றனர். சுருக்கமாகவும் பிற ஒத்த கலைச்சொற்கள் அடிப்படையிலும் நிறநோக்கி எனலாம். |
978. | நிற விளக்க நுண்ணோக்கி | color-translating microscope | |
979. | நிறஒப்புமானி | Tintometer | நிறக்கலவைமானி , நிறஏற்றமானி,வண்ணச் சாயல்மானி , மென்னிறச்சாயல் அளவைக் கருவி
எனப் பலவாறாகக் கூறப்படுகின்றது. நேர் மொழிபெயர்ப்பாக இவை அமைகின்றன. நிறம் தரும் பொருளின் தன்மையை ஆராயவும் ஒப்பிடவும் உதவும் கருவி. எனவே, நிறஒப்புமானி எனலாம்.
|
980. | நிறம்மாறு கதிரியமானி
|
chromoradiometer | |
981. | நிறமாலை ஈரமானி | spectral hygrometer | |
982. | நிறமாலை உடனொளிர் மானி | spectro fluorometer | |
983. | நிறமாலை ஒளிமானி | spectra photometer/ spectro photometer | |
984. | நிறமாலை ஒளிர்வு ஒளிமானி | spectra pritchard photometer | ஒளிர்வுப் பரப்பை அளவிடும் ஒளிமின் கருவி.
நிறமாலை ஒளிர்வு ஒளிமானி.
|
985. | நிறமாலை முனைவுமானி | spectro polarimeter | |
986. | நிறமாலை வெங்கதிர்மானி | spectrobolometer
|
கதிரியக்க அலைநீளத்தை வரையறுப்பதற்கான,
அலைமாலை நோக்கியும் வெங்கதிர்மானியும் இணைந்த கருவி. |
987. | நிறமாலை வெயில்மானி | spectro pyrheliometer | |
988. | நிறமாலைநோக்கி | spectroscope | |
989. | நிறமாலைமானி | spectrometer | அலைமாலை அளவி(-இ.), கதிர்நிரல் அளவி(-இ.), நிறமாலைமானி(-ஐ.), திருசிய மானி(-ஐ.), நிறமாலை அளவி(-ஐ.), வண்ண அளவுமானி(-ஐ.), வண்ணப்பட்டைமானி(-செ.) , நிறமாலைக்கருவி என ஒவ்வொருவகையாகக் குறிப்பிடுகின்றனர்.
நிறமாலை ஒளிஅலை நீளத்தை அளவிடும் கருவி. |
990. | நிறமானி
|
chromatoptometer | கண்கள் நிறங்களை உணரும் திறனை அளவிடும் கருவி. |
991. | நிறமிலித்
தொலைநோக்கி |
achromatic telescope | |
992. | நிறவரைவி | chromatograph | |
993. | நிறைநீராவி வெம்மிமானி | Joly steam calorimeter
|
இயோவான் இயோலி( John Joly :1857–1933) என்னும் அறிவியலாளர் பெயரில் அழைக்கப்படும் இக்கருவியைப் பணி அடிப்படையில், நிறைநீராவி வெம்மிமானி எனலாம். |
994. | நீட்சி மானி | tensometer | |
995. | நீர் ஊடுருவுமானி | infiltrometer | |
996. | நீர் வெம்மிமானி | water calorimeter | நீரின் வெப்பநிலை உயர்ச்சியில் வானலை நிகழ்வெண் திறன் கணக்கிடுவது. |
997. | நீர்ப்பயன்மானி | water-meter | குடியிருப்பு மனைகள், வணிகக்கட்டடங்கள் முதலானவற்றிற்குக் குழாய் மூலம் வரும் நீரின் பயனளவைக் கணக்கிடும் கருவி. நீர்மானி என்றால் ஐடிரோமீட்டர் / hydrometer எனத் தவறாக எண்ணலாம்.
வடிகால் நீரளவி(-செ.) என்றால் சாக்கடைநீர் / drainage எனத் தவறாகக் கருதலாம். எனவே, நீர்ப்பயன்மானி எனலாம். |
998. | நீர்-பாய்வு வெயில் மானி | water-flow pyrheliometer | |
999. | நீர்ம அடர்த்திமானி | arcometer | அதன் திரண்மத்திலும் பருமத்திலும் (mass and volume) ஏற்படும் இழப்பை அளவிடுவதன் மூலம் நீர்மத்தின் அடர்த்தியைக் கணக்கிட உதவுவது. |
1000. | நீர்ம அடைப்பு மானி | liquid-sealed meter |
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply