கலைச்சொல் தெளிவோம்! 139 நோய் வெருளி-Nosophobia
நோய் வெருளி-Nosophobia
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து (பரிபாடல் : 4:13)
உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின் (ஐங்குறுநூறு : 28: 1)
நோயொடு பசி இகந்து ஒரீஇ, (பதிற்றுப்பத்து : 13: 27)
நோய் தணி காதலர் வர, ஈண்டு (அகநானூறு : 22:20)
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! (புறநானூறு : 13: 9)
இவை போல் நோய் (259), நோய்ப்பாலஃது (1), நோய்ப்பாலேன்(2), நோயியர்(1), நோயேம்(1), நோயை(2), நோலா(1), நோவ(30), நோவது (1), நோவர்(1), நோவல்(4), நோவன(1), நோவாதோள்(1), நோவாய் (2), நோவார்(1), நோவு(1), நோவெள்(1), நோவேல்(2), நோவேன்(5), என்பன நோய் பற்றிய சங்கச் சொற்களாகும்.
நோய் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய
நோய் வெருளி-Nosophobia
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply