Alliumphobia01

கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia

பூண்டு(7) வகை பற்றி ஏற்படும் தேவையற்ற பேரச்சம்

பூண்டு வெருளி-Alliumphobia

 

கலைச்சொல் தெளிவோம்!1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia

 பெண்(18), பெண்கோள்(1), பெண்டிர்(63), பெண்டிரேம்(1), பெண்டினை(1), பெண்டு (18), பெண்மை(6) எனப் பெண் என்னும் சொல்லைப் புலவர்கள் 108 இடங்களில் கையாண்டுள்ளனர்.

பெண்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய

பெண் வெருளி-Gynephobia/Gynophobia

கலைச்சொல் தெளிவோம்! 152. மகவு வெருளி-Kiddophobia

குழவி என்னும் சொல் 41 இடங்களில் வந்திருந்தாலும், இளங்குழந்தையரையே பெரிதும் குறிப்பதால் பொதுவான சொல்லாகக் கருத இயலவில்லை.

பிள்ளை என்னும் சொல் 30 இடங்களிலும், மகவு என்னும் சொல் 5 இடங்களிலும், சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றாலும், பெரும்பாலும் விலங்கினம், பறவையினம் முதலானவற்றின் மகவினையே குறிக்கின்றன. பெரும்பாணாற்றுப் படையில் மட்டும் மக்களின் குழந்தைகள் மகவு என்று குறிக்கப்பெற்றுளன.

மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப (பெரும்பாண் ஆற்றுப்படை :பெரும்பாண் ஆற்றுப்படை : 58)

மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி (பெரும்பாண் ஆற்றுப்படை : 89)

மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி (பெரும்பாண் ஆற்றுப்படை : 271)

பிள்ளைகள் தம் மீது பாசம் காட்டுவதால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் மகவு வெருளி ஆகும்.

மகவு வெருளி-Kiddophobia

இலக்குவனார் திருவள்ளுவன்