Astraphobia

கலைச்சொல் தெளிவோம்! 157. மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia

மெலி(1), மெலிக்கும்(2), மெலிகோல்(1), மெலிந்த(2), மெலிந்தார்(1), மெலிந்திட்ட(1), மெலிந்திலள் (1), மெலிந்து(9), மெலிய(3), மெலியர்(2), மெலியா(2), மெலியாது(1), மெலியும்(1), மெலிவு(5) என மெலிவு தொடர்பான சொற்கள் சங்கப் பாடல்களில் வருகின்றன. மெலிவு பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம்

மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia

 

கலைச்சொல் தெளிவோம்! 158. வம்பலர் வெருளி-Katikomindicaphobia

 வம்பலன்(1), வம்பலர்(33), வம்ப மாக்கள், வம்ப மாந்தர் ஆகியன அயல்நாட்டில் இருந்து வந்து தங்கும் புதியோரைக் குறிக்கின்றது. அயல் வாழ்நர் (அயல்நாட்டில் இருந்து இங்கு வந்து வாழ்நர்) மீதான இயல்பு மீறிய பேரச்சம்

வம்பலர் வெருளி-Katikomindicaphobia

கலைச்சொல் தெளிவோம்! 159. வானிலை வெருளி-Astraphobia

வான் (246), வான(5), வானக(1), வானகம் (1), வானம் (79) என வானத்தைக் குறிக்கும் சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

வான் தோய் நிவப்பின், தான் வந்து எய்தி (திருமுருகு ஆற்றுப்படை 288)

வான் பொரு நெடு வரை வளனும் பாடி(சிறுபாண் ஆற்றுப்படை 128)

வான் மடி பொழுதில், நீர் நசைஇக் குழித்த (பெரும்பாண் ஆற்றுப்படை : 107)

அகல் வானத்து வெயில் கரப்பவும்; (மதுரைக் காஞ்சி : 50)

வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் (நெடுநல்வாடை : 60)

வானக மீனின் விளங்கித் தோன்றும் (அகநானூறு : 114.11)

வான் நிலையைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய

வான் வெருளி /வானிலை வெருளி-Astraphobia/ Astrapophobia/ Keraunophobia/ tonitrophobia

இலக்குவனார் திருவள்ளுவன்