villus01

kalaicho,_thelivoam01 விரலிvillus

 

விரல்(62), விரல(1), விரலன்(1) ஆகியன சங்க இலக்கியச் சொற்களே. விரல் என்னும் சொல்லின் அடிப்படையில் கலைச்சொல் ஒன்றை உருவாக்கலாம. இதனைத்துணைச் சொல்லாகக் கொண்டு வேறு கலைச் சொற்களையும் உருவாக்கலாம். நம் உடலில் விரல்போன்ற அமைப்பை உடைய உறுப்பு உள்ளது. அதனை விரலி எனலாம். குடலில் அமைந்த இந்த உறுப்பின் பெயர் குடல் விரலி. மிக நுண்ணியதாக அமைந்த விரலி நுண்விரலி. வில்லி/ villi என்றால் குடலுறிஞ்சிகள் (மீனியல்), குடல் பால் குழல்கள்(வேளாணியல்), சிறுகுடல் விரல்கள்(மனையியல்), நுண்விரல்கள் (மருந்தியல்), குடற்பகுதி நுண்ணுறிஞ்சி(கால்நடை) என வெவ்வேறு வகையாகக் குறித்துள்ளனர். விரல்(62) போல் உள்ள இதனை விரலி என்பதே சரி. நுண்ணிதாக உள்ள விரலி நுண் விரலி.

 

விரலி – villus

விரலிகள் – villi

குடல் விரலி – Intestinal villus

சிறுகுடல் விரலிகள் -small intestine villi

நுண்விரலி – microvillus