atlas-in-body

globe01

 

 

 

 

 

kalaicho,_thelivoam01

 50. பிடரென்பு – atlas (உடற்கூறு)

     முதுகெலும்பில் முதல் எலும்பு அட்லாசு எனப்படுகிறது. இதனை முள்ளெலும்பு என்று சொல்வதைவிடப் பிடர்(௨)+என்பு(௧௧) > பிடரென்பு எனலாம்.

   ஆனால் புவிப்பரப்பைக் காட்டும் நிலப்படம்-அட்லாசு/atlas நிலப்படத்தொகுதி [(ஆட்.), (புவி.), (மனை.)] எனக் குறிக்கப் பெறுகின்றன. ஐந்திணைப் பாகுபாட்டுச் சிறப்புடைய தமிழர் நிலவகைகளைத் திணை (௧௮)என்று சொல்வதுதான் எளிமையாயும் மரபாயும அமையும். ஐந்திணைப் படங்களைக் குறிப்பதால் திணைப்படம் என்பதே பொருத்தமாக அமையும்.

திணைப்படத்தைக் கோளவடிவில் காட்டும் கோள வடிவிலான குளோபு-globe என்பதைத் திணைக் கோளம் என்று சொல்ல வேண்டும்.

பிடரென்பு – atlas (உடற்கூறு)

திணைப்படம்- atlas (புவியியல்)

திணைக் கோளம்-globe