கலைச்சொல் தெளிவோம் 51 : படப் பொறி- camera; காட்சிப்பொறி-video
51 : படப் பொறி- camera; காட்சிப்பொறி-video
படம் எடுக்கும் பொறியை நிழற்படக் கருவி (ஆட்.), புகைப்படக் கருவி (வேளா.,மனை.), ஒளிப்படக்கருவி(பொறி.), என்று சொல்கின்றனர். போட்டோ/photo என்பதற்குத் தொடக்கத்தில் புகைப்படம் என்றும் பின்னர் நிழற்படம் என்றும் சொல்லி இப்பொழுது ஒளிப்படம் என வந்தாலும் பழஞ் சொற்களையே சில துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படம் அல்லது நிழற்படம் அல்லது ஒளிப்படம் என்னும் கருவியின் அடிப்படையில் படமெடுக்கும் கருவியைக் குறிப்பிடுகின்றனர். போட்டோ/ போட்டோகிராபிக்(கு) என்றால் ஒளிப்படம் என்று சொல்லி அதனை எடுக்கும் கருவியை – ஒளிப்படக் கருவியைச் சுருக்கமாகப் படப் பொறி எனலாம். குறிப்பிட்ட பொழுதிலான அசையாப் படம் போன்று அசைகின்ற இயக்கத்தைக் காட்சியாகக் காணும் வகையில் படம் எடுக்கும் பொறியயைக் காட்சிப்பொறி எனலாம்.
படப் பொறி- camera
காட்சிப்பொறி-video
Leave a Reply