கலைச்சொல் தெளிவோம் 64. உருமாறி-ameaba
உருமாறி
உரு(168), மாறி(24) முதலான சங்கச சொற்கள் உருவத்தையும் மாறுபடும் இயல்பையும் குறிக்கின்றன. அமீபா என்பதற்கு ஒலிபெயர்ப்பில் அவ்வாறே தமிழில் குறிக்கின்றனர். கிரேக்க மொழியில் அமீபா (amoibè) என்பது ‘மாற்றம்’ என்பதைக் குறிக்கின்றது. உருவத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் தன்மையால் இதற்கு இப்பெயர் சூட்டி உள்ளனர். முதலில் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட கிரேக்க கடவுளின் புரோட்டியசு (Proteus) என்ற பெயரைக் கொண்டு குறிப்பிட்டனர். உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால் அவ்வாறு குறிப்பிட்டுள்னர். நாம் உருமாறி என்றே குறிப்பிடலாம்.
உருமாறி-ameaba/ amoeba/ameba (உருமாறிகள்-amoebae)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply