கலைச்சொல் தெளிவோம்! 75. செல்-Cirrocumulus
75. செல்-Cirrocumulus
செல்
செல்(117) என்பதற்கு உள்ள சில பொருள்களில் ஒன்று முகில் என்பதாகும். “வான்முழக்குச் செல்” (பரிபாடல் 13.44) என்னும் பொழுது இடி முழக்கத்துடன் இணைந்த மழைமுகிலைக் குறிப்பிடுகின்றது. இத்தகைய தன்மை உடைய 7000 பேரடி (மீட்டர்) உயரத்தில் உள்ள சுருள்குவிவு முகில் சிர்ரோகியூமுலசு/Cirrocumulus எனப்படுகின்றது.
செல்-Cirrocumulus
– இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொற்களைத் தமிழில் தருவதுடன் உரிய படங்களும் அளித்துத் தெளிவுபடுத்துவது தாங்கள் மட்டுமே! இவை யெல்லாம் பாடநூல்களில் இடம் பெற்றால் அறிவியலை நாம் ஆள்வது உறுதி உங்களின் தொண்டு தொடர வாழ்த்துகிறேன்.