சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 417-420
(தமிழ்ச்சொல்லாக்கம்: 411-416 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 417-420
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
417. தரித்திரர் – இல்லார்
418. காந்தன் – நாயகன்
419. அந்தரியாக பூசை – உட்பூசை
நூல் : அட்டரங்க யோகக்குறள் வருத்தமற வுய்யும் வழி (1923)
பரிசோதித்தவர் : சேரா. சுப்பிரமணியக் கவிராயர்
(திருவாவடுதுறை ஆதீன வித்துவான்)
★
420. விவாக முகூர்த்தப் பத்திரிகை – மண இதழ்
(1524)
நாட்கள் உருண்டோடின. நம் பேராசிரியர் (மயிலை சிவமுத்து) முப்பத்திரண்டாம் அகவையைக் கடந்து முப்பத்து மூன்றாம் அகவையைக் கண்டார். அப்போது அவருக்குத் திருமணம் செய்வது பற்றி பேச்சு எழுந்தது. நம் பேராசிரியரின் ஆசிரியராகிய மணி. திருநாவுக்கரசு முதலியார் அவர்களால் மண இதழ் என்னும் தலைப்போடு திருமண அழைப்பிதழ் எழுதப் பெற்றது. நம் பேராசிரியர் 10.9.1924 இல் உற்றார் உறவினர் அனைவரும் மனங்களிக்கப் பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள்.
எண் குணத்து முத்தாய் எழிலிற் குமரனாய்
வண்தமிழிற் சாமியாய் வாழ்காளை – பெண்குணத்து
மங்கையர்க்குப் பேரரசாம் மானுடனே பல்லாண்டு
மங்கலமாய் வாழ்க மகிழ்ந்து.
என மனமகிழ்ந்து வாழ்த்த மங்கையர்க்கரசியார் என்னும் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். தமிழ்நெறிக் காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து நினைவு மலர். மாணவர் மன்ற வெளியீடு, சென்னை.
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply