(தமிழ்ச்சொல்லாக்கம் 161 – 168 தொடர்ச்சி)

 1. யோகநித்திரை – அறிதுயில்
  அறிதுயில் எல்லாவற்றையு மறியா நின்றே துயிலல். இதில் அறிதலும் துயிறலும் ஒருங்கு நிகழ்தலான் இது துணைவினையெனப்படும். இதனை யோக நித்திரையென்பர் வடநூலார்,

நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) பக்கம் : 55

 1. ஆசி – வாழ்த்து
  ஆசி – ஆசிசு என்னும் வடசொல்லின் விகாரம். வாழ்த்து என்பது பொருள்.
  மேற்படி நூல் : பக்கம் -285
  உரையாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
 2. (ட்)செரம் – மழித்தல்
  முகத்திடை நீண்டவுரோமம், நீண்ட முகரோமம் (தாடி மீசை முதலாயின) நீண்ட என்றதனால், வபநமில்லாமை விளங்குகின்றது. வபநம் – மழித்தல் ((ட்)செரம்)
  நூல் : குசேலோபாத்தியாநம் மூலமும் உரையும்
 3. இராசநீதி – கோவியல்
  ஓவியத் தொழில்வல் லாருக்
  ⁠கொண்பொருள் வெறுப்ப வீசி
  நாவியற் கருமென் கூந்தல்
  ⁠நங்கைமா ரெழுதி வைத்த
  பூவியற் படமாங் காங்குப்
  ⁠பொலிவது காணுந் தோறும்
  கோவியற் கண்ண னென்றுட்
  ⁠கொண்டுபின் தெளிவ னம்மா.
 4. வியல் – பெருமை, கோவியல் – அரசியல் (இராச நீதி)

நூல் : குசேலோபாக்கியாநம் (1904) பக்கம் : 388
நூலாசிரியர் : பெங்களூர் வல்லூர் தேவராச பிள்ளை

 1. (இ)லெளகிகம் — உலகிதம்
 2. சம்பிரத வாழ்க்கை — மாய வாழ்க்கை
 3. சேமத்திரவியம் — வைப்பு
 4. பாவ வார்த்தை — மறவுரை

நூல் : அறநெறிச் சாரம் (1905)
நூலாசிரியர் : முனைப்பாடியார்
பதிப்பாசிரியர் : தி. செல்வக்கேசவ முதலியார், எம்.ஏ., (சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்