(தமிழ்ச்சொல்லாக்கம் 54-56 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

57. பிராந்தி – மயக்கம்

சடமதியுள்ளவர்கள் (புல்லறிவாளர்) சரீரத்தின் சாரமே ஆத்மாவென்றும், சரீரம் நாசமடையுங்கால் இதுவும் நாசமடைந்து போகின்றதென்றும் நினைக்கின்றார்கள்; ஆனால் இது அவர்களுடைய பிராந்தியே (மயக்கமே) யொழிய வேறல்ல.

நூல்        :               சீவாத்துமா (1881) பக்கம் – 3

நூலாசிரியர்         :               பிரம்மோபாசி

58.          அண்டகோளகை              — வானவட்டம்

59.          இந்திர நீலரத்தினம்          — கார் தந்த மணி

60.          இலேபனம்         — பூசுமருந்து

61.          உதரம்   — வயிறு

62.          உச்சிட்டம்           — எச்சில்

63.          உபநயனச் சடங்கு             — முந்நூல் வினை

64.          கசுத்தூரி — மான்மதம்

65.          கயிலையங்கிரி  — வெள்ளிவிலங்கல்

66.          காளமேகம்         — கறுத்த மேகம்

67.          சிவராத்திரி          — அரனிரவு

68.          சுபாவலட்சணம் — இயல்பு

69.          திலகம்  — நெற்றிப்பொட்டு

70.          தெய்வலோகம்  — பொன்னிலம்

நூல்        :               சிவராத்திரி புராணம் (மூலம்) (1881)

(யாழ்ப்பாணத்திலிருந்த காசி-அ. வரதராச பண்டிதர்)

அரும்பிரயோகவுரை       :               மா. நமசிவாயம்பிள்ளை. (சிவாநந்த சாகர யோகீசுவரர் அவர்களின் மாணாக்கர் மதராசு ரிவினியூபோர்டு ஆபீசு (செட்டில்மெண்ட்டு) கிளாருக்கு

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்