ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1641 – 1650 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1631-1640 இன் தொடர்ச்சி)
1641. வடிவமைப்புப் பொறியியல் | Design Engineering |
1642. வடிவியல் Morphology – தோற்ற இயல், வடிவியல், உருபனியல், அமைப்பியல், வடிவமைப்பியல், உருமாற்றவியல், உருவ இயல், உருவியல், புறவமைப்பியல், புறவடிவியல், உருவாக்கவியல், உருவகம், மாவியல் எனக் கூறப்படுகின்றது. தோற்ற இயல் என்னும் பொழுது காட்சித் தோற்றம் என்றில்லாமல் தோன்றுதல் என்னும் பொருளில் தவறாகப் புரிந்து கொள்வர். இலக்கணததில் உருபனியல் என்று சொல்ல வேண்டும். உருவியல் என்பது அகஉருவியல், புற உறவியல் என இருவகைப்படும். எனவே, தனியாகப் புறவமைப் பியல் என்று சொல்லக் கூடாது. மாவியல் என்பதில் பொருள் தெளிவு இல்லை. ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தான ‘மா’ என்பதிலிருந்து உருவான அரைகுறை ஒலிபெயர்ப்புச் சொல் என்றும் சிலர் கருதுகிறார்கள். மா என்றால் பெருமை, பெரிய, மிகவும், மாமரம், அழைத்தல், அளத்தல், விலங்கு, குதிரை, முதலான 23 பொருள்கள் உள்ளன. எச்சொல்லும் பொருந்தவில்லை. ஆனால் மாவியல் என்றால் இவற்றுள் ஒரு பொருளை எண்ணித் தவறாகக் கருதுவர். பிற எல்லாம் ஒத்த பொருளே. எனவே, சுருங்கிய வடிவில் உள்ள உருவியல், வடிவியல் ஆகியவற்றில் தெளிவாக விளக்கும் வடிவியல் என்பதைத் தெரிவு செய்யலாம். வடிவியல் என்பதை அமைப்பியல் என்றும் இடத்திற்கேற்ப பொருள்கொள்ள வேண்டும். வடிவியல் – Morphology(1) 1643. உருபனியல் – Morphology(2) | Morphology(1) |
1644. வட்டார வானிலையியல் | Meso meteorology |
1645. வட்டாரத் தட்பியல் காண்க : தட்பியல்-Climatology | Meso climatology |
1646. வட்டாரப்புள்ளியியல் | Area Statistics |
1647. வணிகக்கணிதவியல் | Business Mathematics |
1648. வணிகப்பொருளியல் | Business Economics |
1649. வண்டலியல் படிவியல், படிவு அறிவியல், வண்டலியல் எனப்படுகின்றது. வண்டல் முதலானவை படிவு, அரிப்பு முதலியவை பற்றிய இயல் என்ற வகையில் வண்டலியல் – Sedimentology என்பது இங்கே பயன் படுத்தப்பட்டுள்ளது. | Sedimentology |
1650. வண்டுஇயல் | Coleopterology |
(தொடரும்)
Leave a Reply