Phonophobia_ஒலி வெருளிkalaicho,_thelivoam01 97. ஒலி வெருளி-Phonophobia

ஒலி (115), ஒலிக்குங்கால் (1), ஒலிக்குந்து 92), ஒலிக்கும் (19), ஒலித்த (1), ஒலித்தல் (1), ஒலித்தன்று (1), ஒலித்து (9), ஒலிந்த (2), ஒலிப்ப (29), ஒலிப்பர் (1), ஒலிபு (1), ஒலிய (1), ஒலியல் (5), ஒலிவரும் (9) என ஒலிபற்றிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சான்றுக்குச் சில:

ஓங்கு திரை ஒலி வெரீஇ, (பொருநர் ஆற்றுப்படை : 206)

ஒலி முந்நீர் வரம்பு ஆக (மதுரைக் காஞ்சி : 2)

கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப, (குறிஞ்சிப் பாட்டு : 228)

ஒலி நெடும் பீலி ஒல்க, மெல் இயல் (நெடுநல்வாடை : 98)

மலி ஓதத்து ஒலி கூடல் (பட்டினப் பாலை : 98)

நாள் உறை மத்து ஒலி கேளாதோனே? (புறநானூறு : 257.13)

கடல் ஒலி கொண்டு, செழு நகர் வரைப்பின் (பதிற்றுப்பத்து : 21.12)

மலி ஓதத்து ஒலி கூடல், (பட்டினப் பாலை : 98)

கடுமான் தேர் ஒலி கேட்பின் (அகநானூறு : 134.13)

உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ (குறுந்தொகை : 303.3)

குரலொலி, உரத்துப் பேசுதல், தொலைபேசி ஒலி, பிற ஒலி முதலியவற்றால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய

ஒலி வெருளி/தொலைபேசி வெருளி-Phonophobia