work-phobia-Ergophobia

கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia

 

 பணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது.

மருந்தில் கூற்றத்து அருந்தொழில் (புறநானூறு : 3.12)

முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலில் (பரிபாடல் : 3.71)

செய்தொழில் கீழ்ப்பட்டாளோ, இவள்? (கலித்தொகை : 99.12)

தொழில் செருக்கு (அகநானூறு : 37.6)

மழை தொழில் உதவ (மதுரைக் காஞ்சி :10)

பாசறைத் தொழிலே (நெடுநல்வாடை :358)

கருந்தொழில் கலிமாக்கள் (பட்டினப் பாலை :62)

தொழில் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் தொழில் வெருளி ஆகிய

தொழில் வெருளி-Ergo phobia

– இலக்குவனார் திருவள்ளுவன்