(வெருளி நோய்கள் 539-543: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி)

ஐரிய மக்கள் தொடர்பானவை மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஐரிய வெருளி.

அயர்லாந்து நாட்டினரிடம், அவர்களது ஐரிய மொழியிடம், அவர்களின் அடக்குமுறைப்போக்கு, வேறுபாட்டுணர்வு முதலானவற்றிடம், கலை, பண்பாடு, நாகரிகம் முதலானற்றிடம் ஏற்படும் மிகை வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் கொண்டிருப்பர். 

1863 இல் காதரீன் ஓ நெயில்(Kathleen o’neil) என்பவர் உதவி தேவை – ஐரியர் யாரும் விண்ணப்பிக்க வேண்டா (Help wanted – no Irish need apply)என எழுதிய பாடல் ஐரியர்கள் வாழ்ந்த நாடெங்கும் இசைக்கப்பெற்றுப் பரவலாகப் புகழ்பெற்றது. நாட்டில் பலரிடம் ஐரிய வெறுப்பு இருந்ததையும் இதனால் ஐரிய வெருளிக்கு ஆளானவர்கள் இருந்தமையையும் உணரலாம்.

 Hibernia என்பது அயர்லாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயராகும்.

ஐரோப்பியா தொடர்பானவை குறித்து ஏற்படும் காரணமற்ற பேரச்சம் ஐரோப்பிய வெருளி எனப்படும்.

ஐரோப்பியா, ஐரோப்பிய மக்கள், ஐரோப்பியா தொடர்பானவை குறித்து ஐரோப்பியர்களிடையேயும் ஐரோப்பியர்கள் அல்லாதவர்களிடையேயும்  காரணமற்ற பேரச்சமும் கொண்டிருப்பர். ஐரோப்பிய ஒன்றிணைப்பு ஏற்பட்ட பின்பும் இதன் மீது ஏற்படும் அச்சமும் ஐரோப்பிய வெருளியில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, ஐரோ/யூரோ எனப்படும் ஐரோப்பிய நாணயத்தின் மீதான வெறுப்பும் அச்சமும் ஐரோப்பிய வெருளியில் அடங்கும்.

00

ஒகையோ மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒகையோ வெருளி.

ஐக்கிய அமெரிக்காவில் 17 ஆவதாக 1803ஆம் ஆண்டில் இணைந்த மாநிலம் ஒகையோ(Ohio). பெரிய ஏரிகள் பகுதியில் அமைந்துள்ளது. ஒகையோ என்றால் வட அமெரிக்கப் பழங்குடியாகிய இராக்குவா மக்களின் மொழியில் ‘நல்லாறு’ எனப் பொருள். இதன் தலைநகரம் கொலம்பசு(Columbus).

00

547. ஒடுக்கு வெருளி – Catastolephobia

ஒடுக்கப்படுதல்(repression) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒடுக்கு வெருளி.

பண்பாடு, நாகரிகம், கலை, மொழி, இனம், சமயம், சாதி, நாடு முதலானவற்றில் பிற பிரிவினரால் அல்லது அரசால் ஒடுக்கி ஆளப்படுவது குறித்த பேரச்சம்.

00

ஒட்டகம் குறித்த அளவுகடந்த பேரச்சம் ஒட்டக வெருளி.

Kamil என்றால் ஒட்டகம் எனப் பொருள்.

வயிறு ஒட்ட இருந்தாலும் – பட்டினி கிடந்தாலும் -தாங்கும் விலங்கைப் பழந்தமிழர் ஒட்டகம் என்றனர்.

உயர வெருளி உள்ளவர்களுக்கு ஒட்டக வெருளி வருகிறது.

(தொடரும்)